அதிகவட்டிக்கு ஆசைப்பட்டு போலியான ஏமாற்று நிறுவனங்களில் முதலீடு செய்ய வேண்டாம் என பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) பொதுமக்களை எச்சரித்துள்ளது. இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் இது போன்ற தவறான வாக்குறுதி கள் அளிக்கும் நிறுவனங்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
பல நிறுவனங்கள் செபி-யிடம் அனுமதி பெறாமல் அதிக வட்டி தருவதாகக் கூறி பல திட்டங்களை பிரபலப்படுத்துகின்றன. இதுபோன்ற நிறுவனங்களை நம்ப வேண்டாம் என்றும் செபி அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
பல்வேறு நிறுவனங்கள் அதிக வட்டி தருவதாக போலியான வாக்குறுதிகளை அளித்து வருகிறது. இந்த நிறுவனங்கள் ஒட்டுமொத்த மாற்றத்தகுந்த முன்னுரிமை பங்குகளை (சிசிபி), ஒட்டுமொத்த மீண்டும் புதுப்பிக்கக்கூடிய முன்னுரிமை பங்குகளை அளிப்பதாக வாக்குறுதி அளிக்கின்றன. ஆனால் இதற்கான அனுமதியை அவை செபி-யிடம் பெறுவதில்லை என்றும் அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.
இதுபோன்ற வாக்குறுதிகளை கூட்டுறவு சங்கங்கள், பொது மக்களிடம் சேமிப்புகளை திரட்ட அனுமதிக்கப்படும் வங்கியல்லாத தனியார் நிறுவனங்கள் (என்பிஎப்சி) ஆகியன இதுபோன்ற திட்டங் களை அறிவிக்கின்றன. நிதி நிறுவனங்கள், பரஸ்பர சகாய நிதி சங்கங்கள் ஆகியன நிறுவன சட்டத்தின்கீழ் பதிவு பெற்று செயல்படுகின்றன. இத்தகைய நிறுவனங்களின் நடவடிக்கைகள் செபி-யின் கட்டுப்பாட்டின்கீழ் வருவதில்லை.
இதனால் இத்தகைய நிறுவனங்கள் இது போன்ற முதலீட்டாளர்ளை தவறாக வழிநடத்தும் முதலீட்டுத் திட்டங்களை அறிவித்து நிதி திரட்டுகின்றன. இவ்விதம் திரட்டப்படும் நிதிக்கு உரிய வருமானம் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது என்றும் செபி தெரிவித்துள்ளது. பல்வேறு கூட்டுறவு சங்கங்கள் வட்டி தருவதாக அளித்துள்ள வாக்குறுதிகள் தொடர்பாக முதலீட் டாளர்கள் பலரும் அனுப்பிய புகாருக்கு பதில் அளிக்கும் விதமாக இத்தகைய அறிக்கையை செபி வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே இத்தகைய கூட்டுறவு சங்கங்களை செபி கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற அதிக வட்டி தரும் அல்லது முதிர்வுத் தொகை அதிகமாக இருக்கும் என தவறான வாக்குறுதி அளிக்கும் நிறுவனங்கள் விஷயத்தில் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். என்றும் அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago