தொழில், வர்த்தகம் சார்ந்த விஷயங்களில் இந்தியாவை முன்னுரிமை நாடுகள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என அமெரிக்காவில் உள்ள தொழிலதிபர்கள் சிலர் அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் வலியுறுத்தியுள்ளனர். குறிப்பாக மருந்து தயாரிப்பு மற்றும் உற்பத்தித் துறையைச் சேர்ந்த தொழில்துறையினர் இக்கோரிக்கையை முன்வைத் துள்ளனர்.
அறிவுசார் சொத்துரிமை (ஐபி) விதிமுறைகளை மீறும் நாடுகள் மற்றும் பிற நாடுகளில் அமெரிக்க தயாரிப்புகளுடன் போட்டியிடும் வகையிலான பொருள்களைத் தயாரிக்கும் நாடுகள் முன்னுரிமை நாடுகள் பட்டியலில் சேர்க்கப்படும்.
இந்தியாவின் வர்த்தக நடைமுறை விதிகள் மிகவும் பாரபட்சமாக இருப்பதாகவும் அறிவுசார் சொத்துரிமை (ஐபி) விதிகளை காக்கும் வகையில் அவை இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒருவேளை அமெரிக்க தொழில்துறையினரின் வற்புறுத் தலின்பேரில் இந்தியா முன்னுரிமை பட்டியல் நாடுகளில் சேர்க்கப் பட்டால், இந்தியா, அமெரிக்கா இடையே வர்த்தக போர் நிகழும் அபாயம் உள்ளது என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
வர்த்தக பிரதிநிதிகள் குழுவினர் அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் குழுவிடம் இக்கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.
இது தவிர, 60 தொழில் துறை ஆலோசனை அமைப்புகள் 2 தனித்தனி கடிதங்களை அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் அமைப்புக்கு (யுஎஸ்டிஆர்) அனுப்பியுள்ளன. இதில் இந்தியாவின் தொழில் கொள்கைகள் பாரபட்சமாக இருப்பதாகவும், வேண்டுமென்றே அறிவுசார் காப்புரிமை விதிகளை இந்தியா மீறுகிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளன.
இந்த மாதிரியான கொள்கைகள் உற்பத்தித் துறையினருக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும், பெருமளவில் வேலையிழப்பை உருவாக்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அரசு கடைப்பிடித்து வரும் கொள்கைகள் வர்த்தக உறவுகளை மிகவும் பலவீனமடையச் செய்து விட்டது என்றும், இது அறிவுசார் காப்புரிமை விதிக்கு எதிரானது என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனால் சர்வதேச வர்த்தக நாடுகள் பட்டியலிலிருந்து இந்தியாவை விலக்கி வைக்க வேண்டும் என்று கூறப்பட்டது.
அமெரிக்க நிறுவனங்களுக்கு அறிவுசார் சொத்துரிமையை வழங்க தொடர்ந்து இந்தியா மறுத்து வருவதாக அறிவுசார் சொத்துரிமை உரிமையாளர்கள் சங்கத்தின் செயல் இயக்குநர் ஹெர்ப் வாம்ஸ்லி குற்றம் சாட்டியுள்ளார். இதே காரணங்களுக்காக அமெரிக்கர்களுக்கு தங்கள் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க தொழில்துறையினர் மேற்கொண்டு வரும் இத்தகைய முயற்சிகள் இந்தியாவின் அன்னிய முதலீடுகளைத் தடுத்துவிடும் என்று கூறப்படுகிறது.
இந்தியாவில் நீதிமன்ற தீர்ப்புகள் கிடைப்பது அனாவசி யமாக காலதாமதமாகிறது. வர்த்தகம் தொடர்பான சில விவகாரங்கள் 7 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் கிடப்பில் உள்ளதாக அவர் கூறினார்.
இது தொடர்பாக நடைபெற்ற உயர்நிலை பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. பேச்சு வார்த்தையில் நம்பிக்கை வைக்காமல், இந்தியா தொடர்ந்து தனது தொழில் கொள்கைகளை பிற துறைகளில் வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் தயாரிக்கப்படும் மருந்துப் பொருள்களுக்கு காப்புரிமை மறுக்கப்படுகிறது. இது காப்புரிமை மற்றும் காப்புரி மையில் உள்ள உரிமைகளை, ஒழுங்கமைப்பு வாரிய தகவல் தொகுப்புகளை சிதைக்கும் வகையில் இந்தியாவின் நடவடிக்கைகள் அமைந்துள்ளாக தொழில்துறையினர் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து அறிவுசார் காப்புரிமை விதிகளை மீறிவரும் இந்தியா மீது நடவடிக்கை எடுப்பதோடு இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது..
இந்தியாவின் செயல்பாடுகள், கொள்கைகள் அது நடைமுறைப் படுத்துதல் ஆகியன அமெரிக் காவில் உற்பத்தித் துறையை வெகுவாகப் பாதிப் பதாக சர்வதேச பொருளதார விவகாரங்கள் மற்றும் இந்தியா மற்றும் கூட்டமைப்பு நாடுகளி டையே வெளிப்படையான வர்த்தக உறவுக்கான அமைப்பின் தலைவர் லிண்டா டெம்ப்ஸே குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
வணிகம்
9 hours ago
வணிகம்
14 hours ago
வணிகம்
16 hours ago
வணிகம்
22 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago