செல்போன், டிவி, ரெபரி ஜிரேட்டர், ஏர்கண்டிஷனர் தயாரிப்பில் முன்னணியில் உள்ள கொரியாவைச் சேர்ந்த எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் நடப்பு நிதி ஆண்டில் ரூ. 800 கோடியை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. இதில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி (ஆர் அண்ட் டி) பணிக்கு ரூ. 300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சூன் குவோன் தெரிவித்துள்ளார்.
இந்த முதலீடு மூலம் நிறுவனத்தின் வருமானம் ரூ. 22 ஆயிரம் கோடியாக எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். ரூ. 500 கோடியை பிராண்டிங் மற்றும் சந்தைப் பணிக்குப் பயன்படுத்த உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
நுகர்வோர் மின்னணு பொருள் விற்பனைச் சந்தையில் எல்ஜி தயாரிப்புகள் 30 சதவீத சந்தையைப் பிடித்துள்ளன. இதை மேலும் 5 சதவீதம் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.
வாஷிங் மெஷின் உள்பட மொத்தம் 230 புதிய தயாரிப்புகளை எல்ஜி டெக் 2014 கண்காட்சியில் காட்சிப்படுத்தியுள்ளது. இவற்றில் 85 சதவீத பொருள்கள் புதிய அறிமுகமாகும். 4 ஜி ஸ்மார் ட்போனில் 2 மாடல்கள் புதிய ரகமாகும். இவற்றின் விலை ரூ. 46 ஆயிரம் மற்றும் ரூ. 49 ஆயிரமாகும்.
ஸ்மார்ட்போன் விற்பனைச் சந்தையில் 10 சதவீதத்தை எட்ட நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. உலகிலேயே மிகப் பெரிய 77 அங்குல ஓலெட் டிவி மற்றும் ரெபரிஜிரேட்டர் மற்றும் ஏர்கண்டிஷனர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக குவோன் தெரிவித்தார்.
தென் கொரியாவின் எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் அங்கமான எல்ஜி நிறுவனத் துக்கு இந்தியாவில் 2,000 விற்பனையகங்களும் 2 தொழிற்சாலைகளும் உள்ளன. நடப்பு ஆண்டில் ஃபிளாட் பேனல் டி.வி. மற்றும் செல்போன் விற்பனை அதிகரிக்கும் என்று நம்புவதாக அவர் தெரிவித்தார். நுகர்வோர் மின்னணு பொருள் விற்பனை இந்தியாவில் ரூ. 50 ஆயிரம் கோடி அளவுக்கு வாய்ப்புள்ளதாக நிறுவனம் கணித்துள்ளதாக குவோன் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
வணிகம்
4 hours ago
வணிகம்
9 hours ago
வணிகம்
11 hours ago
வணிகம்
17 hours ago
வணிகம்
19 hours ago
வணிகம்
19 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago