அன்னிய நிறுவன முதலீடு ரூ. 3,000 கோடி

By செய்திப்பிரிவு

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 3,000 கோடி ரூபாய் அன்னிய முதலீடு இந்திய சந்தைக்கு வந்திருக்கிறது. முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கும் புதிய அரசு விரைவில் அமையவிருக்கும் என்ற நம்பிக்கை காரணமாக இந்த தொகை இந்திய சந்தைக்கு வந்திருக்கிறது.

மார்ச் 7-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 18,944 கோடி ரூபாய் இந்திய சந்தைக்கு வந்திருக்கிறது. அதேபோல 15,859 கோடி இந்திய சந்தையிலிருந்து வெளியேறி இருக்கிறது. மொத்த நிகர முதலீடு 3,075 கோடி ரூபாய் வந்திருப்பதாக பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணை யமான செபியின் இணைய தளத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அதே சமயத்தில் 10,358 கோடி ரூபாயை இந்திய கடன் சந்தை யிலும் அன்னிய நிறுவன முதலீட் டாளர்கள் முதலீடு செய்துள்ளனர்.

நடப்புக் கணக்கு பற்றாக்குறை குறைந்திருப்பது, பணவீக்கம் குறைந்திருப்பது போன்றவை காரணமாக பொருளாதாரம் வேகம் எடுக்கும் என்ற நம்பிக்கையால் இந்திய சந்தையில் அன்னிய முதலீடு அதிகரித்திருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்திருக் கிறார்கள்.

நடப்புக் கணக்கு பற்றாக்குறை மற்றும் நிதிப்பற்றாக்குறை கட்டுக்குள் இருப்பதாகவும், 18 மாதங்களுக்கு முன்பு இருந்த நிலையை விட இப்போது இந்தியப் பொருளாரம் மேம்பட்டு இருப்பதாகவும் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கடந்த வாரம் தெரிவித்திருந்தது நினைவு கூரத்தக்கது.

அன்னிய முதலீடு காரணமாக இந்திய சந்தைகள் கடந்த வாரம் 3.79 சதவீதம் உயர்ந்தன. இந்த ஆண்டில் இதுவரை 5,193 கோடி ரூபாய் அன்னிய முதலீடு இந்திய பங்குச்சந்தைக்கு வந்திருக்கிறது. ஜனவரியில் 1,404 கோடி ரூபாயும், பிப்ரவரியில் 714 கோடி ரூபாயும் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

6 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

மேலும்