சீனா என்றால் நமக்கு நினைவுக்கு வரும் விஷயங்கள் என்ன… மக்கள்தொகையில் முதலிடம், நமது எல்லையில் அடிக்கடி அட்டூழியம் செய்யும், கம்யூனிச இரும்புத் திரை நாடு. மேலும் கூடுதல் தகவல் என்றால், சீனப்பெருஞ்சுவர், அதையொத்த ராணுவ, ஆயுத பலம். வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார சக்தி என்பதுதான்.
சீனாவிடம் கற்றுக்கொள்ள வேண்டிய பொருளாதாரப் பாடங்கள் கொஞ்சம் உள்ளன. சர்வதேச நாடுகளுடன் பொருளாதார நலன்களைக் காத்துக் கொள்ளவும், வளர்த்துக் கொள்ளவும் ஒவ்வொரு நாடும் வெவ்வேறு உத்திகளைக் கையாளுகின்றன. அதில் சீனாவின் ஒரு மதியூக வியூகம்தான் பாண்டானாமிக்ஸ்.
எக்கனாமிக்ஸ் என்பது பொருளாதாரப் படிப்பு என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதில் அரை கிலோவை எடுத்து பாண்டா கரடியுடன் கலந்தால் கிடைப்பதுதான் பாண்டானாமிக்ஸ். தென் மத்திய சீனாதான் பாண்டா கரடிகளின் பிறப்பிடம். மூங்கிலையும், இலை தழை களையும் சாப்பிட்டு சாதுவாக விளையாடித் திரியும் அப்பிராணி. கடைசியாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி சுமார் 1600 பாண்டா கரடிகளே உலகில் உள்ளன. இதில் 50 பாண்டாக்கள் சீனாவுக்கு வெளியே உள்ளன. சுமார் 350 பாண்டாக்கள் மிருகக்காட்சி சாலைகளிலும், பிரீடிங் சென்டர் எனப்படும் இனப்பெருக்க மையங்களிலும் பராமரிப்பில் உள்ளன.
நம்மூரில் பாண்டாவைக் காண்பித்தால் கரடிக்கு தலையிலும், உடம்பிலும் வெள்ளையடிச்சு வச்சிருக்கா ங்கப்பா என்று கூறிவிட்டுப் போய்விடுவோம். ஆனால் மேற்கத்திய நாடுகளில் அப்படியல்ல. இது போன்ற அரிய விலங்குகளை டிக்கெட் வாங்கிப் பார்பதற்கெ ன்றே பெரும் கூட்டம் உள்ளது. இதனால் பாண்டா உள்ள மிருகக் காட்சிசாலைகளில் கூட்டம் அலைமோதும். இதனால் சீனாவின் தவப்புதல்வனான பாண்டாவுக்கு மேற்கத்திய நாடுகளில் கடும் கிராக்கி. இதனை நன்றாகப் புரிந்து கொண்ட சீனா கையில் எடுத்தது ஓர் அருமையான வியாபாரத் தந்திரம்.
எந்த நாட்டுக்கும் பாண்டாவை வாடகைக்கு மட்டுமே சீனா வழங்கும். பாண்டா மீதான முழு உரிமையும் சீனாவிடம்தான் இருக்கும். ஒரு ஜோடி பாண்டாவின் ஒராண்டு வாடகை 1 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 6 கோடி ரூபாய்). இதுவும் 10 ஆண்டுகளுக்கு மட்டும்தான். அதன் பிறகு அதிக பணம் கொடுத்து வாடகையை புதுப்பிக்க வேண்டும். இதுதவிர பாண்டாக்கள் சாப்பிட பிரத்தியேக மூங்கிலை விற்பனை செய்தும் காசு பார்க்கிறது சீனா. இதில் பல்வேறு கட்டுப்பாடு களும் உண்டு. வாடகைக்கு வாங்கிய பாண்டாவை குட்டி போட வைக்க எந்த பிரத்யேக நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. அப்படியே இயற்கையாக குட்டிகள் வந்தால், 4 ஆண்டுகளுக்குப் பின் அதனை சீனாவிடம் ஒப்படைக்க வேண்டும்.
வாந்திபேதி, வயிற்றுப்போக்கு வந்து மனிதர்களின் பராமரிப்பில் குறைபாடு ஏற்பட்டு பாண்டா இறந்துபோனால் 5 லட்சம் டாலர் அபராதம். இவ்வளவு நிபந்தனைகளுடன் அந்த பாண்டா கரடியை வாங்கிக் கொஞ்சத்தான் வேண்டுமா என்ற கேள்வி நமக்கு எழும். ஆனால் எவரிடமும் இல்லாத அரிதானவற்றை வைத்துக் கொள்வதில் பெருமிதம் காணும் மேற்கத்திய மனநிலை பாண்டாவுக்கு ஆளாய் பறக்கிறது.
டிமாண்ட் அதிகமானால் விலை அதிகரிப்பது வழக்கம்தானே. இப்போது தங்களுக்கு வேண்டிய நவீன தொழில்நுட்ப ங்களை வழங்கும் நாடுகளுக்கு மட்டுமே செலக்டிவாக பாண்டாவை வழங்குகிறது மொனாபொ லிஸ்ட்டான சீனா. பாண்டாவைக் காட்டி அணுமின் உற்பத்திக்காக யுரேனியம் சப்ளை ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கும் அளவுக்கு முன்னேறிவிட்டது சீனாவில் உள்ள பாண்டா ஆய்வு மையத்துக்கு வந்து பயிற்சி பெற்றுச் செல்கிறார்கள் வெளிநாட்டு பராமரிப்பாளர்கள்.
பாண்டாவை விமானத்தில் வெளிநாடுகள் எடுத்துச் செல்லும் நடைமுறை அலாதியானது. சமீபத்தில் பஸ்ட் கிளாஸ் வகுப்பில் சிறப்பு ஏற்பாடுகளுடன் ராஜ மரியாதையுடன் ஒரு ஜோடி பாண்டாவை அழைத்துச் சென்றது சிங்கப்பூர். இதுவரை 15 நாடுகளுக்கு மட்டுமே பாண்டாவை வழங்கியுள்ளது சீனா. கனடாவின் டோராண்டோவில் பாண்டா வந்து இறங்கிய ஒரு சிலநாளில் தேசிய பூங்காவுக்கு வருகை தந்தவர்கள் எண்ணிக்கை மட்டும் 10 லட்சம். முன்பு ஓராண்டில் மட்டுமே 10 லட்சம் பேர் வருவது வழக்கம்.
ஒரு பொருளுக்கு கிராக்கி ஏற்படுத்துவதும், அதனை நிலைநிறுத்துவதும் சிறப்பான மார்க்கெட்டிங் தந்திரம். இதில் சிறப்பான கரடி வித்தையை காட்டி வருகிறது சீனா. நம்நாட்டில் கூட சிங்கவால் குரங்கு, வங்கப் புலி, மயில் என்று சில அரிய விலங்கு, பறவைகள் உள்ளன. இதைவைத்து குரங்கனாமிக்ஸ், மயிலனாமிக்ஸ் என்று எதையாவது டெவலப் பண்ணினால், நாமும் கொஞ்சம் பிழைக்கலாம்.
முக்கிய செய்திகள்
வணிகம்
55 mins ago
வணிகம்
14 hours ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago