இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று பங்குச்சந்தை, அந்நியச் செலாவணி சந்தைகளில் வர்த்தகம் மந்தமாக தொடங்கியுள்ளது.
பங்குச்சந்தையில் வர்த்தக துவக்கத்தின் போது சென்செக்ஸ் 91.07 புள்ளிகள் குறைந்து 20,760.26 புள்ளிகள் என்ற நிலையிலும், நிப்டி 33.90 புள்ளிகள் குறைந்து 6,178.95 புள்ளிகள் என்ற நிலையில் இருந்தன. ஆசிய பங்குச்சந்தைகளில் ஏற்பட்டுள்ள சரிவு இந்திய பங்குச்சந்தையிலும் எதிரொலித்துள்ளதாக பங்கு வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
ஐ.டி., வங்கி, மின்சக்தி, உலோகம், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு துறை பங்கு வர்த்தகத்தின் மந்த நிலை இந்திய பங்குச்சந்தை துவக்க வர்த்தக சரிவுக்கு காரணம் என கூறப்படுகிறது.
அந்நியச் செலாவணி சந்தையில் வர்த்தக துவக்கத்தின் போது அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 21 காசுகள் குறைந்து 62.43 என்ற நிலையில் இருந்தது. எண்ணெய் இறக்குமதியாளர்கள் மத்தியில் அமெரிக்க டாலருக்கான தேவை அதிகரித்துள்ளதால் இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago