5 சதவீத வளர்ச்சி சாத்தியம்: மான்டேக் சிங் அலுவாலியா

By செய்திப்பிரிவு

நடப்பு நிதி ஆண்டில் 5 சதவீத பொருளாதார வளர்ச்சி எட்ட முடியும் என்று திட்டக்குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா நம்பிக்கை தெரிவித்தார்.

12-வது திட்ட காலத்தில் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 8 சதவீத அளவுக்கு இருக்கும் என முன்னர் திட்டக்குழு கணித் திருந்தது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பொருளாதார வளர்ச்சி இறங்குமுகத்தில் உள்ளது. இருப்பினும் இந்த ஆண்டில் 5 சதவீத வளர்ச்சி எட்டப்படும் என்று அவர் கூறினார்.

குறுகிய கால அடிப்படையில் எவ்வித மதிப்பீடுகளையும் தெரிவிக்க திட்டக்குழு விரும்பவில்லை. நிதி அமைச்சகம் என்ன கூறுகிறதோ அதன் அடிப்படையில் செயல்படு வதையே பிரதான நோக்கமாகக் கொண்டிருக்கிறோம். இப்போதைய சூழலில் நிதியமைச்சகம் கூறும் கருத்தில் எனக்கு மாறுபாடில்லை. நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதத்துக்கு மேல் இருக்கும் என்ற நிதியமைச்சகத்தின் கருத்து எனக்கு ஏற்புடையதே என்று அவர் கூறினார்.

இம்மாத தொடக்கத்தில் நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை யில், இந்திய பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பி யுள்ளது. இதனால் நடப்பு நிதி ஆண்டில் வளர்ச்சி விகிதம் 5 சதவீதத்துக்கு அதிகமாக இருக்கும் என்று குறிப்பிட்டிருந்தது. முதலீடு கள் அதிகரிப்பு, வேளாண் சாகுபடி அதிகரிப்பு ஆகியவற்றை தனது கருத்துக்கு பின்புலமாக நிதியமைச் சகம் சேர்த்திருந்தது. மேலும் பொருளாதார விவகாரங்களுக்கான நிதிச் செயலர் அர்விந்த் மாயாராமும் 5 சதவீதத்துக்குக் கீழ் குறைய வாய்ப்பில்லை என குறிப்பிட்டிருந் தார்.

நிதியமைச்சகம் வரையறுத் துள்ள 5 சதவீதத்துக்கும் மேலாக பொருளாதாரம் வளர்ச்சியவதற்கான சாத்தியக்கூறுகளை ஒதுக்கிவிட முடியாது என்று மான்டெக் சிங் கூறினார்.

பொருளாதார தேக்க நிலை காரணமாக 2012-13-ல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீத அளவுக்கு இருக்கும் என்று கணிக்கப் பட்டது. 12-வது திட்ட காலத்தில் 8 சதவீத அளவுக்கு இருக்கும் என மான்டேக் சிங் கூறியிருந்தார். ஆனால் முதல் ஆண்டிலேயே வளர்ச்சி 5 சதவீத அளவுக்குக் குறைந்திருந்தது. இதனால் திட்டக்குழு தனது வளர்ச்சி குறித்த அறிக்கையை மறு ஆய்வு செய்ய வேண்டியதாயிற்று.

எப்படியிருப்பினும் 8 சதவீத வளர்ச்சி என்பது சாத்தியமானது தான். ஆனால் அதை எட்டுவதற்கு கால அவகாசம் பிடிக்கும். 12வது திட்ட காலத்தின் முதல் இரண்டு ஆண்டுகளில் வளர்ச்சி விகிதம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாது போனது ஏமாற்றமளிக்கிறது என்ற மான்டேக் சிங் ஒப்புக் கொண்டார்.

பொதுவாக ஐந்தாண்டு திட்ட காலத்தில் மூன்றாம் நிதி ஆண்டில் மறு ஆய்வு அறிக்கையை திட்டக்குழு தாக்கல் செய்யும். அதில் முன்னர் கணிக்கப்பட்ட வளர்ச்சி விகிதம், எட்டப்பட்ட விகிதம், எதிர்காலத்தி எட்ட வேண்டிய அளவு ஆகியன இடம்பெறும்.

11-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் அதாவது 2007 முதல் 2012 வரையான காலத்தில் நாட்டின் பொருளதார வளர்ச்சி சராசரியாக 8 சதவீத அளவுக்கு இருந்தது.

12வது ஐந்தாண்டு திட்ட கால அறிக்கையில் பல்வேறு வளர்ச்சி வகைகள் பட்டியலிடப்பட்டிருந்தன. ஒருவேளை பொருளாதார வளர்ச்சி எழுச்சி பெறாவிடில் வளர்ச்சி விகிதம் 6 சதவீதம் முதல் 6.5 சதவீதத்துக்குள் இருக்கும் என குறிப்பிட்டிருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

1 hour ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

மேலும்