அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் மேற்கொள்ள உள்ள ஊக்க நடவடிக்கைக் குறைப்பை எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார். நடப்பு நிதி ஆண்டில் இந்திய பொருளாதாரம் 5 சதவீத வளர்ச்சியை எட்டும் என்றும் வரும் ஆண்டுகளில் இது 6 சதவீத அளவுக்கு உயரும் என்றும் டாவோஸில் நடைபெறும் உலக பொருளாதார பேரவை மாநாட்டில் சிதம்பரம் கூறினார்.
இந்திய பொருளாதாரம் ஸ்திரமாக அதேசமயம் வளர்ச்சிப் பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. படிப்படியாக முன்னேறி 8 சதவீத வளர்ச்சியை எட்டுவோம் என்று அவர் கூறினார். நடப்பு நிதி ஆண்டில் 5 சதவீத வளர்ச்சியையும் அடுத்து வரும் ஆண்டுகளில் 6 சதவீத வளர்ச்சியையும் இது எட்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் கடன் பத்திரங்களை திரும்பப் பெரும் நடவடிக்கையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலவற்றை செய்துள்ளோம். பொதுவாக வளரும் பொருளாதார நாடுகளில் இதனால் சிறிதளவு பாதிப்பு இருக்கத்தான் செய்யும். ஆனால் அதை எதிர்கொள்வதற்குத் தயாராக பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என்று அவர் கூறினார்.
அமெரிக்காவில் பொருளாதார தேக்க நிலை மாறும்போது மாதந்தோறும் படிப்படியாக ஊக்கநடவடிக்கைகளை திரும்பப் பெறுவதென முடிவு செய்துள்ளது.
பற்றாக்குறையைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதால் முதலீடுகள் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்ட சிதம்பரம், வளங்களை மேலும் அதிகரித்துக் கொண்டுள்ளோம் என்றும், ரூபாயின் மாற்று மதிப்பு ஸ்திரமாக உள்ளது என்று குறிப்பிட்ட அவர், பங்குச் சந்தையிலும் ஸ்திரமான நிலை நிலவுவதாகக் குறிப்பிட்டார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்குப் பிறகு மத்தியில் அமையவுள்ள புதிய அரசுக்கு பற்றாக்குறையைக் கட்டுப்படுத்துவதுதான் பிரதான பணியாக இருக்கும் என்று குறிப்பிட்ட அவர், எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பற்றாக்குறை அளவு கைமீறி போவதற்கு அனுமதிக்கக் கூடாது என்றார்.
முக்கிய செய்திகள்
வணிகம்
13 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
9 days ago
வணிகம்
9 days ago