இயற்கை எரிவாயு விலை உயர்ந்தால் உள்நாட்டில் உற்பத்தி அதிகரிக்கும் என்றும் இதன் மூலம் இறக்குமதி குறையும் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்தார்.
இயற்கை எரிவாயு விலையை உயர்த்திக் கொள்வதற்கு ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வியாழக்கிழமை மத்திய அமைச்சரவை அனுமதி அளித்தது.
எரிவாயு விலையை உயர்த்த வில்லையென்றால் உள்நாட்டில் எரிவாயு உற்பத்தி செய்வது குறை வாக இருக்கும்.
இதனால் இறக்கு மதியை மட்டுமே சார்ந்திருக்க வேண்டிய நிலை நீடிக்கும் என்று அகில இந்திய நிர்வாகவியல் சங்கம் (அய்மா) ஏற்பாடு செய்திருந்த பொதுத்துறை நிறு வன மாநாட்டில் பேசுகையில் மொய்லி குறிப்பிட்டார்.
உள்நாட்டில் உற்பத்தி செய்யப் படும் இயற்கை எரிவாயுவுக்கு விலை நிர்ணயிப்பதற்கான புதிய வழிமுறையை கடந்த ஜூன் மாதம் அரசு வகுத்தது.
இது 2014-ம் ஆண்டு ஏப்ரல் முதல் அமலுக்கு வர உள்ளது. திருத்தப்பட்ட விலையின்படி 10 லட்சம் பிரிட்டிஷ் யூனிட்டுக்கு 8.4 டாலர் விலை நிர்ணயிக்கப்ட்டது. முன்னர் இது 4.2 டாலராக இருந்தது.
இயற்கை எரிவாயு உற் பத்தியில் ரிலையன்ஸ் நிறு வனம் ஈடுபட்டுள்ளது. உயர்த்தப்பட்ட விலைக்கு மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது.
வங்கி உத்தரவாதத்தின் அடிப்படையில் கிருஷ்ணா கோதாவரி படுகையில் (கேஜி) டி6 பிளாக்கில் இயற்கை எரிவாயு உற்பத்தி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள ஹைட்ரோ கார்பன் வளங்களைக் கண்டறிய வும், அவற்றை எடுக்கவும் அதிக அளவில் முதலீடு தேவைப்படு வதாக மொய்லி கூறினார்.
ஹைட்ரோகார்பன் படிமங்க ளைக் கண்டறிய தொழில்நுட்பம் அவசியம். அத்துடன் இது தொடர்பான ஆராய்ச்சியும் தேவை. இந்தியாவின் எரிவாயு தேவையில் 50 சதவீதம் இறக்குமதி செய்யப் படுகிறது.
உள்நாட்டில் எண்ணெய் வளம் கண்டறிவதற்கான பணிகளை ஊக்குவிக்காவிடில் இறக்குமதியை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்று மொய்லி சுட்டிக் காட்டினார்.
விலை உயர்த்தப்பட்டதால் உற்பத்தி 3 லட்சம் கன அடி உயரும். ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட விலையில் எரிவாயுவை எடுப்பது நடைமுறை சாத்தியமாகாது என்பதைக் கணக்கில் கொண்டே விலை உயர்த்தப்பட்டது என்றார் மொய்லி.
முக்கிய செய்திகள்
வணிகம்
8 hours ago
வணிகம்
16 hours ago
வணிகம்
19 hours ago
வணிகம்
19 hours ago
வணிகம்
21 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago