ஆலன் முலாலி - இவரைத் தெரியுமா

By செய்திப்பிரிவு

$ ஃபோர்டு நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி.

$ இதற்கு முன்பு போயிங் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்தவர். 1969-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை போயிங் நிறுவனத்தில் இருந்தார்.

$ நாஸா இயக்குநர் குழுவில் ஆலோசகர் தவிர, வாஷிங்டன் பல்கலைகழகம், கன்ஸாஸ் பல்கலைகழகம், எம்.ஐ.டி. உள்ளிட்ட பல அமைப்புகளின் இயக்குநர் குழுவில் இருக்கிறார்.

$ கன்ஸாஸ் பல்கலைகழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலை அறிவியல் பட்டம் பெற்றவர்.

$ அமெரிக்காவில் இருக்கும் முக்கியமான பிஸினஸ் பத்திரிகைகள் அனைத்தும் ஏதாவது ஒரு வகையில் இவருக்கு விருது கொடுத்திருக்கிறது.

$ நஷ்டம் அல்லது பிரச்சினையில் இருக்கும் நிறுவனத்தை மாற்றுவதில் வல்லவர். இவர் ஃபோர்டு நிறுவனத்தில் பொறுப்புக்கு வரும் போது அந்த நிறுவனம் கடுமையான நஷ்டத்தில் இருந்தது. போயிங் நிறுவனத்தையும் மாற்றிக்காட்டினார்.

$ இதனால்தான் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துக்கு புதிய தலைவரை தேடும் போது இவரது பெயரும் அடிபட்டது. ஆனால் 2014-ம் ஆண்டு வரை ஃபோர்ட் நிறுவனத்திலே தொடரபோவதாக ஆலன் தெரிவித்துவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

மேலும்