பொதுத்துறை வங்கியான யுனைடெட் பாங்க் ஆப் இந்தியாவின் அதிகரித்துள்ள வாராக் கடன்கள் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், அவ்வங்கியின் தலைமை மேலாண் இயக்குநர் அர்ச்சனா பார்கவா வெள்ளிக்கிழமை ராஜினாமா செய்தார்.
அர்ச்சனா பார்கவா, 1977-ல் பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணியில் சேர்ந்து, பல்வேறு பிரிவுகளில் பணியாற்றினார். கனரா வங்கியில் செயல் இயக்குநராக இருந்த இவர் யுனைடெட் வங்கியின் தலைமை மேலாண் இயக்குநராக 2013 ஏப்ரல் 23-ம் தேதி பொறுப்பேற்றார். இந்நிலையில் அவர் திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
இது தொடர்பாக நிதிச் சேவைகள் துறைச் செயலர் ராஜீவ் தக்ரு கூறுகையில், “அர்ச்சனா பார்கவா விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். அவரின் கோரிக்கையை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. கடந்த 20-ம் தேதியிலிருந்து தலைமை மேலாண் இயக்குநர் பொறுப்பிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்” எனத் தெரிவித்தார்.
‘உடல் நலக்குறைவு காரணமாக பணியிலிருந்து விலகுவதாக‘ தன் ராஜினாமா கடிதத்தில் அர்ச்சனா பார்கவா குறிப்பிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் 2015 பிப்ரவரி 28-ம் தேதி வரை அவருக்கு பதவிக்காலம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
வங்கியின் செயல் இயக்குநர்கள் தீபக் நரங் மற்றும் சஞ்சய் ஆர்யா இருவரும் இணைந்து அடுத்த தலைவர் தேர்வு செய்யப்படும் வரை வங்கியின் தலைமை மேலாண் இயக்குநர் பொறுப்பைக் கவனிப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்.பி.ஐ. விசாரணை
கடந்த 2013 மார்ச் 31-ம் தேதி ரூ.2,963.8 கோடியாக இருந்த யுனைடெட் பேங்க் ஆப் இந்தியாவின் மொத்த வாராக் கடன் கடந்த டிசம்பர் இறுதியில் 188.3 சதவீதம் உயர்ந்து ரூ.8,546 கோடியாக அதிகரித்தது. வாராக்கடன் தொகை அதிகரித்ததை அடுத்து தணிக் கைக்கு இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது; தணிக்கை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு விட்டது.
யுனைடெட் பேங்க் ஆப் இந்தியாவில் மத்திய அரசு 88 சதவீத பங்குகளை வைத்திருக்கிறது. நடப்பு நிதியாண்டில் ரூ. 700 கோடியை முதலீடாக அரது வழங்கியுள்ளது. நிதிச்சுமையைக் கருத்தில் கொண்டு கூடுதலாக ரூ. 1,000 கோடி முதலீட்டை அதிகரிக்க யுனைடெட் வங்கி திட்டமிட்டது. இதற்கு இயக்குநர் குழு ஒப்புதல் அளித்திருந்தது.
முக்கிய செய்திகள்
வணிகம்
21 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago