யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் கடன் வாங்கி ரூ.1,394 கோடி முறைகேடு செய்ததாக ஹைதராபாத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
மும்பை பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல கோடி ரூபாய் முறைகேடு செய்யப்பட்டதாக தொழிலதிபர் நீரவ் மோடி மீது ஏற்கெனவே சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அதன்பிறகு பல வங்கிகளில் நடந்த மோசடிகள் அம்பலமாகி வருகின்றன.
இந்நிலையில், மற்றொரு வங்கி மோசடியும் தற்போது வெளிவந்துள்ளது. ஹைதராபாத்தில் உள்ள ‘தொட்டம் இன்ஃப்ரா ஸ்ட்ரக்சர்’ என்ற நிறுவனம், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் ரூ.1,394 கோடி கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள் ளது.
இது தொடர்பான புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள சிபிஐ அதிகாரிகள், இந்த நிறுவனத்தின் தலைவர் சாலலித் தொட்டம்புடி, அவரது மனைவி கவிதா தொட்டம்புடி ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே நேற்று முன்தினம் சென்னையைச் சேர்ந்த கனிஷ்க் கோல்ட் நிறுவனத்தினர், பல வங்கிகளில் ரூ. 824 கோடி கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்டதாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
வணிகம்
3 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago