ரிலையன்ஸ் ஜியோ, ஜிடிஎல் இன்ஃபிரா ஒப்பந்தம்: செல்போன் கோபுரங்களை பகிர்ந்து கொள்ள முடிவு

By ஐஏஎன்எஸ்

முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம் ஜிடிஎல் இன்ஃபிராஸ்டிரக்சர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதன் மூலம் அந்நிறுவனத்தின் செல்போன் கோபுரங்களை ரிலையன்ஸ் ஜியோ பயன்படுத்திக் கொள்ளும். ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 4ஜி சேவையை அளிக்கத் திட்டமிட்டு, நாடு முழுவதும் இந்த சேவையை அளிப்பதற்கான லைசென்ஸைப் பெற்றுள்ளது.

ஜிடிஎல் இன்ஃபிரா மற்றும் சென்னை நெட்வொர்க் இன்ஃபிரா ஆகிய இரண்டுக்கும் 27,800 செல்கோபுரங்கள் உள்ளன. 22 தொலைத் தொடர்பு வட்டாரங்களில் இந்த கோபுரங்கள் உள்ளன.

அடுத்த தலைமுறை குரல்வழி மற்றும் தகவல் பரிமாற்ற சேவையை அளிப்பற்கு வசதியாக வலுவான அடித்தளத்தை அமைக்கத் திட்ட மிட்டு அதற்கான கட்டமைப்பு வசதிகள் செய்யப்படுவதாக ரிலை யன்ஸ் ஜியோ நிறுவன நிர்வாக இயக்குநர் சஞ்சய் மஷ்ருவாலா தெரிவித்துள்ளார்.

செல்கோபுரங்களை பகிர்ந்து கொள்வது தொடர்பாக ஏற்கெ னவே ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அசென்ட் டெலிகாம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதன் மூலம் 4,500 செல் கோபுரங்களின் சேவையை பகிர்ந்து கொள்ள உள்ளது. அத்துடன் டவர் விஷன் நிறுவனத்துடன் 8,400 கோபுரங்களையும், ஏடிசி இந்தியாவுடன் 11,000 கோபுரங் களையும் பகிர்ந்து கொள்ளத் திட்டமிட்டுள்ளது.

இது தவிர அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதன்படி 5,20,000 கி.மீ. தூர கண்ணாடியிழை கேபிள் வசதியை பயன்படுத்திக் கொள்ள உள்ளது. அத்துடன் 45 ஆயிரம் செல்போன் கோபுர சேவையையும் ரிலையன்ஸ் ஜியோ பயன்படுத்திக் கொள்ள உள்ளது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

24 mins ago

வணிகம்

12 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

மேலும்