கள்ள நோட்டுகளை கண்டுபிடிக்கும் விஷயத்தில் முறையான விதிமுறைகளைக் கடைபிடிக்காததையடுத்து நாட்டின் மிகப்பெரிய அரசு வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுக்கு ரூ.40 லட்சம் அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது
கடந்த 1-ம் தேதி இந்த உத்தரவை ரிசர்வ் வங்கி பிறப்பித்துள்ளது.
இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
ரிசர்வ் வங்கி சார்பில்நடத்தப்பட்ட ஆய்வில், நாட்டின் மிகப்பெரிய அரசு வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் இரு கிளைகளில் திடீரென ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது, கள்ள நோட்டுகளை கண்டுபிடிப்பது குறித்து ரிசர்வ் வங்கி பல்வேறு விதிமுறைகளை வங்கிகளுக்கு வகுத்துள்ளது.
அந்த விதிகளை இரு வங்கிக்கிளைகளும் முறையாக பின்பற்றவில்லை. இதன்படி வங்கி ஒழுங்குமுறைச்சட்டம் 1949, பிரிவு 47ஏ, பிரிவு 46ன் கீழ் விதிமுறையை மீறியது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த ஜனவரி மாதம் அந்த ஸ்டேட் வங்கி நிர்வாகத்துக்கு அறிவிக்கை அனுப்பி விளக்கம் கேட்கப்பட்டது. அந்த வங்கி நிர்வாகம் அளித்த விளக்கம் மனநிறைவாக இல்லாததையடுத்து, ரூ. 40லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த வாரம், வாரக் கடன் தொடர்பாக ஆவணங்களை முறைப்படுத்தி வைக்கவில்லை என்பதற்காக ரூ. 7லட்சம் ஆக்சிஸ் வங்கிக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், கேஒய்சி விதிமுறைகளை கடைபிடிக்காதமைக்காக இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு ரூ.20லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்குது.
முக்கிய செய்திகள்
வணிகம்
9 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago