தனித்திறமை மேம்பட்டால் தொழிலில் வெற்றி நிச்சயம்

By சதீஷ் கிருஷ்ணமூர்த்தி

எந்தத் தொழிலாக இருந்தாலும் அதில் தனக்கென்ற ''கோர் காம்பிடென்ஸ்'' என்ற ஒன்றைத் தெளிவாய் இனங்கண்டு கொண்டு அதைத் திறமையாய் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்கிறார்கள் ‘சி.கே. பிரஹலாத்’ மற்றும் ‘கேரி ஹேமல்’. 1990-ல் ‘ஹார்வர்ட் பிசினஸ் ரெவ்யூ’ ஜர்ன லில் தங்கள் நிர்வாக ஆராய்ச்சியின் முடிவுகளை ‘கோர் காம்பிடென்ஸ் ஆஃப் தி கார்ப்பரேஷன்’ (Core Comptence of the Corporation) என்று தலைப்பில் வெளியிட்டனர்.

''கோர் காம்பிடென்ஸ்'' என்பது ஒவ்வொரு கம்பெனியும் தங்களுக்கென்று பிரத்யேகமாக, பல காலம் பிரயத்தனப்பட்டு சம்பா திக்கும் தனித்திறமை. அது தயா ரிப்பு திறனாகவோ, தாங்களே கண்டுபிடித்த ஒரு தொழிற் திறனாகவோ, தாங்கள் தயாரிக்கும் ஒரு உட்பொருளா கவோ, விநியோகத் திறனாகவோ அல்லது இதன் கூட்டாகவோ இருக்கலாம். ஏதோ ஒன்றாக இருக்கவேண்டும்.

கோர் காம்பிடென்ஸ் கம் பெனிக்கு தனி சக்தியைக் கொடுத்து அதன் மூலம் வாடிக்கை யாளர்களுக்குச் சிறந்த பொருட் களை கொடுத்து, அவர்களின் தேவைகளைப் பூரணமாய் பூர்த்தி செய்து, போட்டியாளர்களை விட வலிமையானதாக மாற் றும் வல்லமை படைத்தது என்கிறார்கள் இவர்கள்.

உதாரணத்திற்கு ‘நைக்கி’ ஷூவை எடுத்துக் கொள்வோம். ஷூவை வடிவமைக்கும் திறனைத் தான் நைக்கி தனது கோர் காம்பிடென்ஸ் என்று நிர்ணயித் துக் கொண்டது. அதனாலேயே ஷூவை வடிவமைப்பதில் தங்கள் முழுக்கவனத்தையும் செலுத்தி, அந்தத் திறனைப் பேணி பாது காத்து, பராமரித்து அதை மேலும் சிறப்பாக்கும் முயற்சிகளை அனுதினமும் செய்து வருகிறது.

நைக்கி தங்கள் ஷூவை மற்ற கம்பெனிகள் மூலமாகக்கூட அவுட் சோர்சிங் முறையில் தயாரித்தா லும் தயாரிக்கும். ஆனால் ஷூவை வடிவமைக்கும் வேலையை மட்டும் தானேதான் செய்துகொள் ளும். ஏனெனில் நைக்கி கம் பெனிக்கு நன்றாகத் தெரியும், தங்கள் ஷூக்கள் வாடிக்கை யாளர்களுக்கு தரும் எல்லா பயன் களுக்கும் மூல காரணமாய் அமைந்து போட்டியாளர் ப்ராண்டு களை விட சக்தி கொண்டதாக மார்க்கெட்டில் இன்று கொடி கட்டிப் பறக்க வைப்பது தன் கோர் காம்பிடென்ஸ் என்று நிர்ணயித்திருக்கும் ‘வடிவ மைக்கும்’ திறனைத் தான் என்று!

அதே போல் ’ஹோண்டா கம்பெனி’ கோர் காம்பிடென்ஸா கக் கருதுவது இன்ஜின்கள் தயா ரிக்கும் தங்கள் திறனை. ‘ஆப்பிள் நிறுவனம்’ கோர் காம்பிடென்ஸா கக் கருதுவது தங்கள் ‘ட்ச் ஸ்க்ரீன்’ தொழிற்திறனை. ’டாபர்’ கம்பெனி கோர் காம்பிடென்ஸாகக் கருது வது ஆயுர்வேத பொருட்களை பற்றிய தங்கள் அறிவையும் அனுபவத்தையும்.

கோர் காம்பிடென்ஸ் மூன்று முக்கிய தன்மைகள் கொண்டது என்கிறார்கள் பிரஹலாத்தும் ஹேமலும். ஒன்று, கோர் காம்பி டென்ஸ் கொண்டு அதைச் சார்ந்த பலவிதமான பொருட்களை அறி முகப்படுத்தலாம். அறிமுகப் படுத்த முடியும். ‘இன்ஜின்’ தான் ஹோண்டாவின் கோர் காம்பி டென்ஸ் என்பதால் இன்ஜின் இருக் கும் பொருட்களான கார், பைக், ஜெனரேட்டர் என எந்தப் பொரு ளையும் அந்த கம்பெனியால் வெற்றியுடன் அறிமுகப்படுத்த முடிகிறது.

இரண்டாவது, கோர் காம்பி டென்ஸ் கொண்டுதான் வாடிக்கை யாளர்களுக்கு அவர்கள் விரும்பும் பயன்களை முழுமையாகக் கொடுக்கமுடிகிறது. ஸ்போர்ட்ச் ஷூ வாங்கும் வாடிக்கையாளர் களுக்கு முக்கியமானது ஷூவின் பெர்ஃபார்மென்ஸும் அது காலுக்கு கொடுக்கும் கம்ஃபர்ட் டும். அது ஷூவின் வடிவமைப்பி னால் வருவது. அது தானே நைக்கி யின் கோர் காம்பிடென்ஸ். நைக்கி சக்கைப் போடு போடுவதன் ரகசியமும் இதுதான்.

மூன்றாவது, ஒரு கம்பெனியின் கோர் காம்பிடென்ஸை அதன் போட்டியாளர்கள் எளிதில் காப்பி அடிப்பதோ அதற்கு ஈடான பொருளை தயாரித்து அளிப்பதோ லேசுப்பட்ட காரியமல்ல.

தொழில் என்றால் என்ன, பிசினஸ் என்றால் என்ன என்ப தையே மாற்றி சிந்திக்கவேண்டிய அவசரமான உலகத்தில் பிசினஸ் செய்கிறீர்கள். கம்பெனி என்பது பெரிய மரம் போல. அந்த கம்பெனி யின் ப்ராண்டுகள்தான் அதன் இலைகள் மற்றும் பழங்கள். மரத் திற்கு உயிர் கொடுத்து, தண்ணீர் தெளித்து அதை நின்று நிலைத்து தழைக்கவைப்பது கோர் காம்பி டென்ஸ் என்னும் மரத்தின் வேர். ஒரு மரத்தின் ஸ்திரத் தன்மையை யும் அதன் சக்தியையும் இலை களையும் பழங்களையும் பார்த்து எடை போடாமல் வேரின் பலத் தைப் பார்த்து எடைபோட கற்றுக் கொள்ளுங்கள்.

தொழிலை விருத்திசெய்கிறேன் என்று கண்மண் தெரியாமல் தவறுகள் செய்யும் கம்சன்களுக்கு புத்திமதி சொன்ன இந்த நவீன பிரஹலாத் மற்றும் ஹேமலுக்கு நன்றி கூறி அவர்கள் சொன்னதை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். உங்கள் கோர் காம்பிடென்ஸை தெளிவாய் நிர்ணயித்துக்கொள் ளுங்கள். அதுதான் உங்கள் தொழி லின் அஸ்திவாரம், வெற்றியின் அடிநாதம் என்பதை நினை வில் நிறுத்திக்கொள்ளுங்கள்.

satheeshkrishnamurthy@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

5 hours ago

வணிகம்

5 hours ago

வணிகம்

6 hours ago

வணிகம்

17 hours ago

வணிகம்

18 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

மேலும்