போலந்து நிறுவனத்துடன் இன்ஃபோசிஸ் ஒப்பந்தம்

By பிடிஐ

இன்ஃபோசிஸ் நிறுவனம் போலந்தில் உள்ள ஸ்கன்ஸ்கா ரியல் எஸ்டேட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதன்படி இந்நிறுவனத்தின் அலுவலகத்தை 10 ஆண்டுகள் இன்ஃபோசிஸ் நிறுவனம் பயன்படுத்திக் கொள்ள வழியேற்பட்டுள்ளது.

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பிபிஓ பிரிவு போலந்தில் உள்ள லாட்ஸில் செயல்படுகிறது. இங்குள்ள பணியாளர்களின் எண்ணிக்கையை 500 ஆக உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது. விரிவாக்கப் பணிக்காக அலுவலகத்தை ஸ்கன்ஸ்கா ரியல் எஸ்டேட்டிடமிருந்து பெற உள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான போலந்தில் லாட்ஸ் நகரில் கிரீன் ஹோரிசான் அலுவலக வளாகத்தில் அலுவலகம் விரிவாக்கப்படுகிறது.

இது 21 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவிலானதாகும். ஏற்கெனவே இந்த வளாகத்தில் 3,800 சதுர மீட்டர் பரப்பளவில் இன்ஃபோசிஸ் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. புதிய ஒப்பந்தம் 2014-ம் ஆண்டு வரையிலானதாகும். இந்தியாவுக்கு வெளியே இன்ஃபோசிஸ் நிறுவனம் அமைத்துள்ள மிகப் பெரிய அலுவலக வளாகம் இதுவாக இருக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

18 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

8 days ago

மேலும்