புதுப்பேட்டை என்னும் பைக்பேட்டை

By எம்.மணிகண்டன்

சென்னை புதுப்பேட்டையை பைக்பேட்டை என்றும் சொல்லலாம். இந்தியாவில் எங்கும் கிடைக்காத வாகனங்கள் மற்றும் அதன் உதிரி பாகங்களை புதுப்பேட்டையில் வாங்கிவிடலாம். குறுகலான சந்துகளில் அமைந்துள்ள கடைகளுக்குள் தினசரி லட்சக்கணக்கில் வியாபாரம் நடக்கிறது. மேலும் அந்தகால ராஜ்தூத்தில் ஆரம்பித்து இந்த கால ஹோண்டா சிபிஆர் வரை எல்லா ரகடூ-வீலர் உதிரிபாகங்களும் புதுப்பேட்டையில் கிடைக்கும். புழக்கத்தில் இல்லாத வாகனங்களுக்கு உதிரி பாகங்களும் இங்கு கிடைக்கும்.

செகண்ட் ஹேண்ட் பைக்குகளை வாங்க விரும்பும் பலர் புதுப்பேட்டையில்தான் மையம் கொள்கிறார்கள். பட்ஜெட்டுக்கு ஏற்ப டி.வி.எஸ் 50யில் ஆரம்பித்து பல்சர் வரை எல்லா பைக்குகளும் கிடைக்கின்றன. நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தியுள்ள வாகனங்களும் இங்கு ஏராளமாய் உள்ளன. இந்த நிலையில் செகன்ட் ஹேண்ட் வாகனங்களின் விற்பனை வாடிக்கையாளர்களின் தேர்வு, மைலேஜ் என்று பல விஷயங்களை தெரிந்து கொள்ள புதுப்பேட்டை கடைகளுக்கு சென்று வந்தோம். இங்கு பல ஆண்டுகளாக உதிரி பாகம் மற்றும் செகண்ட் ஹேண்ட் பைக்குகளை விற்பனை செய்து வரும் அமீன் என்பவர் கூறியதாவது:

சென்னையில் செகண்ட் ஹேண்ட் மோட்டார் என்றால் அது புதுப்பேட்டைதான் என்கிற அளவுக்கு பல ஆண்டுகளாக வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளோம். புதிதாக பைக் வாங்குவதை விட செகண்ட் ஹேண்ட் பைக் வாங்குவதில் நிறைய நன்மைகள் உள்ளன. புதிதாக சந்தைக்கு வருகிற ஒரு வண்டி ஓட்டுபவரின் கண்ட்ரோலுக்கு வரவே இரண்டு மூன்று மாதங்களாகிவிடும். மேலும் சர்வீஸ், பதிவு என்று நிறைய காத்திருப்புகளும் அதில் உண்டு. ஆனால் செகண்ட் ஹேண்ட் பைக்கில் இந்த சிக்கல்கள் மிகவும் குறைவு.

சென்னை போன்ற பெருநகரங்களில் வேலைக்குச் செல்பவர்களுக்கு அதிகளவில் பைக்கிற்கான தேவை உள்ளது. முக்கியமாக மார்க்கெட்டிங், பத்திரிகை, உள்ளிட்ட துறைகளில் பணிபுரிபவர்கள் செகண்ட் ஹேண்ட் வண்டிகளைத்தான் விரும்பி வாங்குகிறார்கள். ஏனென்றால் அவற்றை பராமரிப்பதும் பாதுகாப்பதும் மிகவும் எளிது.

புதுப்பேட்டையில் வண்டி வாங்க வருபவர்களில் இரண்டு ரகம் உண்டு. ஒன்று மேற்சொன்ன மைலேஜ் பிரியர்கள் என்றால் இன்னொன்று ஸ்போர்ட்டி மாடல் களை விரும்புவோர். இவர்களுக்காக சாதாரண டிஸ்கவர் வண்டியைக்கூட நிஞ்சா ரேஞ்சிற்கு மாற்றங்கள் செய்து கொடுக்கிறோம்.

செகண்ட்ஸ் வண்டிகளை வாங்குகிற போது ஷாக் அப்சர்வரில் ஆரம்பித்து என்ஜினின் சக்தி வரை நிறைய விஷயங்களைக் கவனித்து வாங்க வேண்டியது அவசியம். புதுப்பேட்டையை பொறுத்தவரை வண்டிகளுடனே பிறந்து வண்டிகளுடனே வளர்ந்த ஆயிரக்கணக்கான மெக்கா னிக்குகள் உள்ளனர். அவர்கள் ஒரு வண்டியை கட்டுவதாக இருக்கட்டும். செகண்ட் ஹேண்ட் விற்பனைக்காக ஒரு பைக்கை தயார் செய்வதாகட்டும் ஒரு குழந்தையை போல் பார்த்து பார்த்து உருவாக்குவார்கள்.

உதாரணத்திற்கு வெளியிடங்களிலோ இணையதளங்களிலோ செகண்ட் ஹேண்ட் வண்டிகளை வாங்கும்போது அவர்கள் சாதுர் யமாக வண்டியை வாட்டர் வாஷ் செய்து பளிச்சென வைத்திருப் பார்கள். ஆனால் அதில் ஆயில் லீக் உள்ளதா, வண்டியின் செயல்திறன் எப்படி என்ற விவரங்கள் நமக்குத் தெரியாது. ஆனால் எங்களிடம் இவை எல்லாவற்றையும் சரி செய்துவிட்டு தான் விற்பனைக்கே வைப்போம்.

மேலும் இன்றைக்கு பல ஆண்டுகள் பயன்படுத்தப்படுகிற என்ஜின்கள் துருப்பிடிப்பது வாடிக் கையாகிவிட்டது. அப்படியுள்ள வண்டிகள் அடிக்கடி வேலை வைத்துக்கொண்டே இருக்கும். இதனால் வாங்கிய காசில் பாதிக்கு மேல் மெக்கானிக் கடைகளில் கொடுக்க வேண்டியிருக்கும். மேலும் ஸ்பார்க் பிளக்கை கழற்றிப் பார்த்தால் அது காபி கலரிலோ அல்லது கோதுமை நிறத்திலோ உள்ளது என்றால் என்ஜின் நல்லபடியாக உள்ளது என்று அர்த்தம். இதுவே வெள்ளை நிறத்தில் இருந்தால் அந்த என்ஜின் சீக்கிரமே சூடாகி திணறும் என்பதையும் அறிந்து கொள்ளலாம். இதேபோல் ஏர் கிளீனர், ஆயில் கண்டிஷன் என எல்லாவற்றையும் சோதித்தே விற்பனை செய்கிறோம்.

இந்த வகையில் அதிகம் விற்பனையாகிக்கொண்டிருப்பது பிளாட்டினா, டிஸ்கவர் ஆகிய வண்டிகள்தான். மேலும் சந்தை களைவிட்டு வெளியேறிய சுஸூகி மேக்ஸ் 100, யமஹா, ஹீரோ ஹோண்டா சிடி 100 போன்ற வண்டிகளும் கிடைக்கின்றன. இது தவிர பெண்கள் உபயோகித்த ஸ்கூட்டர்களுக்கும் அதிக கிராக்கி உள்ளது. ஏனென்றால் அவை அதிக தூரம் பயன்படுத்தப்படாமல் வீடு ஆபீஸ் அல்லது கல்லூரி என்கிற அளவிலேயே தான் பயன்படுத்தப்பட்டிருக்கும்.

எனவே ஸ்கூட்டர் வாங்க வருபவர்கள் அப்படி சொல்லியே கேட்கிறார்கள். பெரும்பாலான செகண்ட் வண்டிகளை குறைந்த பட்சம் 8000 ரூபாயில் ஆரம்பித்து 50 ஆயிரத்திற்கு அதிகமாகவும் விற்கிறோம்.

சிலர் புதுப்பேட்டையில் திருட்டு பைக் உள்ளதாக சொல்கின்றனர். இதற்கு முறையான டீலர்களிடம் வண்டிகளை வாங்கினால், திருட்டு பைக் பிரச்சினைகளில் இருந்து தப்பலாம். மேலும் வண்டிகளை வாங்குகிற போது உரிய ஆவணங்கள், பெயர் மாற்றம் ஆகியவற்றை உறுதி செய்து கொண்டால் இன்னும் நல்லது என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

5 hours ago

வணிகம்

21 hours ago

வணிகம்

23 hours ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

மேலும்