டாடா ஸ்டீல் பணியிலிருந்து ஓய்வு பெற்றார் முத்துராமன்

By பிடிஐ

டாடா ஸ்டீல் நிறுவனத்தில் 48 ஆண்டு காலம் பணியாற்றிய நிறுவனத்தின் துணைத் தலைவர் பி. முத்துராமன், வெள்ளிக்கிழமை ஓய்வு பெற்றார். 70 வயதை நிறைவடைந்ததையடுத்து நிறுவன விதிமுறைகளின்படி அவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றதாக டாடா ஸ்டீல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

டாடா ஸ்டீல் நிறுவனத்தில் மிகப் பெரும் மாறுதல் கொண்டு வந்து உலகின் மிகப் பெரிய உருக்கு நிறுவனங்களில் 11-வது இடத்தை டாடா ஸ்டீல் வகிப்பதற்கு முக்கிய பங்கு வகித்தவர் முத்துராமன். தனது 70வது பிறந்த நாளை ஊழியர்களுடன் மிகவும் மகிழ்ச்சிகரமாகக் கொண்டாடினார் அவர். பாம்பே ஹவுசில் உள்ள தனது நண்பர்கள், ஊழியர்களுடன் கலந்து பேசி தனது ஓய்வு பெறும் நாளை கொண்டாடினார்.

வெளிப்படைத்தன்மை மிக்க இந்த நிறுவனத்தில் 48 ஆண்டு காலம் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சி யானதாகவும், பெருமையாகவும் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர் ஓய்வு பெறுவதில் தனக்கு எவ்வித வருத்தமும் இல்லை என்றார். இந்நிறுவனத்தில் தனக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

1966-ம் ஆண்டு பயிற்சி பொறியா ளராக இந்நிறுவனத்தில் சேர்ந்த முத்து ராமன், 2009-ம் ஆண்டு துணைத் தலைவர் பதவிக்கு உயர்ந்தார். அதற்கு முன்பு 8 ஆண்டுகள் நிர்வாக இயக்குநராக இருந்தார். நிறுவனம் விரிவுபடுத்தப்பட்டதோடு தாய்லாந்தில் நாட் ஸ்டீல் ஹோல்டிங்ஸ், மில்லினியம் ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்களைக் கையகப்படுத்துவதில் முக்கிய பங்காற்றினார்.

இந்த நிறுவனங்களுக்கு சிங்கப்பூர், தாய்லாந்து, சீனா, மலேசியா, வியட்நாம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம் ஆகிய இடங்களில் ஆலைகள் உள்ளன. இவை இப்போது டாடா ஸ்டீல் வசம் வந்துள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

45 mins ago

வணிகம்

15 hours ago

வணிகம்

15 hours ago

வணிகம்

15 hours ago

வணிகம்

19 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

மேலும்