ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக வளைகுடா நாடுகளிலிருந்து எண்ணெய் ஏற்றுமதியை தடுக்கப் போவதாக ஈரான் அதிபர் ஹஸன் ரவ்ஹானி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
செம்னான் மாகாணத்தில் நடை பெற்ற பேரணியில் தொலைக்காட்சி மூலம் உரை நிகழ்த்திய ஈரான் அதிபர், ஈரானிலிருந்து எண்ணெய் ஏற்றுமதி செய்வதை தடுக்க முடி யாது என்பது அமெரிக்காவுக்குத் தெரியும் என்று குறிப்பிட்டார்.
ஒருவேளை அவ்விதம் தடுக்க முற்பட்டால், வளைகுடா பகுதி யிலிருந்து ஒரு சொட்டு எண்ணெய் கூட ஏற்றுமதியாகாது என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
1980-ம் ஆண்டிலிருந்து சர்வ தேச நெருக்கடிக்கு உள்ளாகி வருகிறது. அப்போதெல்லாம் வளைகுடா பகுதியிலிருந்து எண் ணெய் ஏற்றுமதி செய்யப்பட மாட் டாது என கூறப்பட்டது. ஆனால் இது வரை ஒருமுறைகூட அப்படி செய்த தில்லை என்று அவர் கூறினார்.
2015-ம் ஆண்டு ஈரானுடன் போட்ட அணு ஆயுத ஒப் பந்தத்திலிருந்து வெளியேறியது மட்டுமின்றி வாஷிங்டன் மீண்டும் சர்வதேச தடையை விதித்து, எண்ணெய் ஏற்றுமதி செய்வதற்கும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதன் நோக்கமே எண்ணெய் ஏற்றுமதி மூலம் ஈரானுக்குக் கிடைக்கும் வருவாயை ஒன்று மில்லாமல் செய்வதுதான். ஆனால் தற்காலிக ஏற்பாடாக 8 நாடுகளுக்கு விலக்கு அளித்துள்ளது என்றார்.
இதற்கு முன்பு கடந்த ஜூலை மாதம் இதே போன்ற எச்சரிக் கையை ரவ்ஹானி விதித்தார். அப்போது சிங்கத்தின் வாலை சீண்டிப் பார்க்க வேண்டாம் என்று அமெரிக்காவை எச்சரித்திருந் தார்.
பொருளாதார தடை காரண மான விளைவுகளை இருட்டடிப்பு செய்து வருகிறார். ஆனால் ஊடகங் கள் ஈரானின் பிரச்சினைகளை பூதாகரமாக பெரிது படுத்தி வருகின் றன என்று குற்றம் சாட்டினார்.
மிகப் பெருமளவிலான பண வீக்கம், மிகப் பெரும் வேலை யிழப்பு ஏற்படும் என்று அச்சமூட்டுகின்றனர். இதுபோன்ற செய்திகளை தவிர்க்க வேண்டும் என்று மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.
ஈரானின் மத்திய வங்கி வெளி யிட்டுள்ள அறிக்கையின்படி அக் டோபர் மாதத்தில் ஈரானில் உணவுப் பொருள் விலை 56 சதவீதம் உயர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. நாட்டில் சில பிரச்சினைகள் இருப்பதை ஒப்புக் கொண்ட ரவ்ஹானி, இந்த பிரச்சினைகள் அனைத்துக்கும் டிசம்பர் 16-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள புதிய பட் ஜெட்டில் தீர்வு இருக்கும் என்றார்.
அத்தியாவசிய பொருள்களுக்கான மானிய உதவி தொடரும் என்றும் பொதுத்துறை பணியாளர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் 20 சதவீதம் உயர்த்தப்படும் என்றும் அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
வணிகம்
11 hours ago
வணிகம்
14 hours ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago