மும்பை: வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ரெப்போ விகிதம் என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதமாகும். ரெப்போ விகிதம் கடந்த 5 ஆண்டுகளாக 6.50% ஆக இருந்த நிலையில், கடந்த பிப்ரவரி 7ம் தேதி 0.25% குறைக்கப்பட்டு, 6.25% ஆக இருந்தது.
இந்நிலையில், இரண்டு மாதங்களில் அது மேலும் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு 6% ஆக மாற்றப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ரிசர்வ் வங்கி தனது நிலைப்பாட்டை 'நடுநிலை' என்பதிலிருந்து 'இணக்கம்' என்ற நிலைக்கு மாற்றியுள்ளது.
2025-26 ஆம் நிதியாண்டுக்கான உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.5% ஆக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் அதே நிதியாண்டுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டு (CPI) பணவீக்கம் 4% ஆகக் கணிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா நடப்பு நிதியாண்டின் முதல் இருமாத பணவியல் கொள்கையில் இந்த அறிவிப்புகளை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து மதியம் 12:00 மணிக்கு செய்தியாளர் சந்திப்பு நடைபெறும். அதில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு ரிசர்வ் வங்கி ஆளுநர் பதிலளிக்க உள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் பரஸ்பர கட்டணங்கள் அமலுக்கு வரும் நாளில், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழுவின் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
வணிகம்
1 hour ago
வணிகம்
8 hours ago
வணிகம்
15 hours ago
வணிகம்
20 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago