தங்கம் விலை பவுனுக்கு ரூ.720 குறைவு!

By செய்திப்பிரிவு

சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.720 குறைந்து ஒரு பவுன் தங்கம் 66,480-க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.90 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,310-க்கு விற்பனை.

தங்கம் விலை கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரு பவுன் ரூ.68,000+ கடந்தது. இந்த நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) பவுனுக்கு ரூ.1,280 என குறைந்தது. இந்த நிலையில் இன்று (ஏப்.5) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.720 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.90 என குறைந்துள்ளது. தற்போது ஒரு பவுன் தங்கம் ரூ.66,480 மற்றும் ஒரு கிராம் ரூ.8,310 என சந்தையில் விற்பனை ஆகிறது.

உலக அளவில் தங்கத்துக்கு டிமாண்ட் அதிகம் உள்ளது. அதன் காரணமாக சர்வதேச பொருளாதார சூழலுக்கு ஏற்ப அதன் விலை ஏற்ற இறக்குத்துடன் இருப்பது வழக்கம். இருப்பினும் இந்தியாவில் அண்மையில் வரலாறு காணாத வகையில் புதிய விலை உச்சத்தை எட்டியது தங்கம். இதற்கு உலக நாடுகளிடையே நிலவும் வர்த்தக ரீதியான தாக்கமும் முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

அண்மையில் பரஸ்பர வரி விதிப்பை அமெரிக்க அதிபர் ட்ரம்ப், உலக நாடுகளுக்கு அறிமுகம் செய்தார். இந்த சூழலில் தான் தங்கம் விலை தற்போது குறைந்துள்ளது.

வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.103-க்கு விற்பனை ஆகிறது. கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.1,03,000-க்கு விற்பனை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

11 hours ago

வணிகம்

14 hours ago

வணிகம்

22 hours ago

வணிகம்

23 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

7 days ago

மேலும்