பிபிஎப் கணக்கில் வாரிசுதாரர் பெயர் சேர்க்க கட்டணம் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

By செய்திப்பிரிவு

பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎப்) கணக்கில் வாரிசுதாரரை சேர்க்கவும் புதுப்பிக்கவும் இனி கட்டணம் வசூலிக்கப்படாது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

இதுகுறித்து 'எக்ஸ்' தளத்தில் நிர்மலா சீதாராமன் நேற்று வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: பிபிஎப் கணக்குகளில் வாரசுதாரரை சேர்க்கவும் புதுப்பிக்கவும் நிதி நிறுவனங்கள் சார்பில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 2018-ம் ஆண்டு அரசு சேமிப்பு மேம்பாடு பொது விதிகளில் தேவையான மாற்றங்கள் செய்து ஏப்ரல் 2-ம் தேதி அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கட்டணம் வசூலிக்க அனுமதிக்கும் பிரிவு நீக்கப்பட்டுள்ளது. இது ஏப்ரல் 2-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

சமீபத்தில் வங்கிகள் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இது, வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் பணம், லாக்கர்களில் வைக்கப்படும் விலையுயர்ந்த பொருட்களுக்கான வாரிசுதாரர்களாக 4 பேர் வரை சேர்க்க அனுமதிக்கிறது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

4 hours ago

வணிகம்

15 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

மேலும்