வணிக பயன்பாட்டுக்கான சமையல் காஸ் சிலிண்டர் விலை குறைந்தது

By செய்திப்பிரிவு

சென்னை: வணிக பயன்பாட்டுக்கான சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.41 குறைந்து. புதிய விலை இன்று (ஏப்ரல் 1) முதலே அமலுக்கு வந்துள்ளது.

இண்டேன், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (ஹெச்பி) போன்ற பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டுக்கு 19 கிலோ எடையிலும் சமையல் காஸ் சிலிண்டர்களை விநியோகம் செய்கின்றன.

இவற்றுக்கான விலை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப மாதந்தோறும் முதல் தேதியில் மாற்றம் செய்யப்படுகிறது. இந்நிலையில், இன்று (ஏப்ரல் 1) வணிக பயன்பாட்டுக்கான சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.41 குறைந்தது.

புதிய விலையின்படி 19 கிலோ எடையிலும் சமையல் காஸ் சிலிண்டர்சென்னையில் ரூ.1,924.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. டெல்லியில் ரூ.1,762-க்கும், மும்பையில் ரூ.1,714.50-க்கும், கொல்கத்தாவில் ரூ.1,872-க்கும்.

வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை எந்த மாற்றமும் இன்றி விற்பனையாகிறது.டெல்லியில் – ரூ.803, கொல்கத்தாவில் ரூ.829, மும்பையில் ரூ.802.50 மற்றும் சென்னையில் ரூ.818.50 என்றளவில் விற்பனையாகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

1 hour ago

வணிகம்

19 hours ago

வணிகம்

20 hours ago

வணிகம்

20 hours ago

வணிகம்

21 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

மேலும்