சென்னை: தங்கம் விலை மீண்டும் ஒரு புதிய உச்சத்தை எட்டியது

By செய்திப்பிரிவு

சென்னை: தங்கம் விலை இன்று (மார்ச் 20) மீண்டும் ஒரு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு பவுன் ரூ.66,480-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. இந்த ஆண்டில் ஜனவரி 29-ம் தேதி முதல் தங்கம் விலை உயரத் தொடங்கியது. ஜனவரி 31-ம் தேதி ஒரு பவுன் ஆபரண தங்கம் ரூ.61,000-ஐயும், பிப்ரவரி 1-ம் தேதி ரூ.62,000-ஐயும் தாண்டியது. பிப்ரவரி 11-ம் தேதி ரூ.64,480 என்றும், 20-ம் தேதி ரூ.64,560 என்றும் அதிகரித்தது.

இதன் பிறகு, ஒருசில நாட்கள் சற்று விலை குறைந்தாலும், பிப்ரவரி 25-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.64,600 ஆக உயர்ந்து, புதிய உச்சத்தை தொட்டது. இதன்பிறகு, ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது. கடந்த மாதம் 16-ம் தேதி ஒரு பவுன் ரூ.63,120-க்கு விற்பனையானது. பின்னர், படிப்படியாக அதிகரித்து ரூ.64,440-க்கு விற்பனையானது. பிறகு, தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது.

இந்நிலையில் இன்று தங்கம் விலை ஒரு பவுன் மீண்டும் ஒரு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஒரு பவுன் ரூ.66,500-ஐ நெருங்கியுள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் இன்று கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ 8,310-க்கும், பவுனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு பவுன் ரூ.66,480-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 அதிகரித்து ஒரு கிராம் ரூ.114-க்கு விற்பனையாகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

2 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

7 days ago

மேலும்