ஜிஎஸ்டி வரி விகிதங்கள் மேலும் குறையும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது: ஜிஎஸ்டி வரி அடுக்கு மற்றும் விகிதங்களை அறிவார்ந்த முறையில் சீரமைக்கும் பணிகள் ஏறத்தாழ இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. ஜிஎஸ்டி விகிதங்களில் ஏற்கெனவே பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள. அதன் காரணமாக 2017 ஜூலை 1-ல் ஜிஎஸ்டி அறிமுகம் செய்த போது வருவாய் நடுநிலை விகிதம் (ஆர்என்ஆர்) 1.5.8 சதவீதமாக இருந்த நிலையில் அது 2023-ல் 11.4 சதவீதமாக குறைந்துள்ளது. இந்த விகிதம் தற்போதைய சீரமைத்தலுக்குப் பிறகு மேலும் குறையும்.
ஜிஎஸ்டியில் காணப்படும் சில முக்கியமான சிக்கல்கள், வரி விகித குறைப்பு, அடுக்கு குறைப்பு ஆகியவற்றில் மாநிலங்களுக்கிடையே ஒருமித்த கருத்தை எட்டுவதில் கடைசி கட்டத்தில் உள்ளோம். அடுத்த ஜிஎஸ்டி கூட்டத்தில் தாக்கல் செய்யும் வகையில் ஜிஎஸ்டி சீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொண்டு வருகிறோம்.
பொதுத் துறை வங்கிகளில் பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிப்பதில் உறுதியாக உள்ளோம். அந்தவிதத்தில், பொதுத் துறை வங்கிகளில் அதிக சில்லறை முதலீட்டாளர்களை உருவாக்க விரும்புகிறோம். இவ்வாறு நிதியமைச்சர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
வணிகம்
55 mins ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
5 days ago