‘பில் பேமென்ட்’களுக்கு கட்டணம் வசூலிக்கத் தொடங்கிய கூகுள் பே!

By செய்திப்பிரிவு

சென்னை: கூகுள் பே யுபிஐ மூலம் மின்சார கட்டணம், குடிநீர் பயன்பாட்டு கட்டணம் போன்றவற்றை பயனர்கள் செலுத்துவது வழக்கம். இந்நிலையில், அதற்கு கட்டணம் வசூலிக்கத் தொடங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு மொபைல் ரீசார்ஜுகளுக்கு ரூ.3 வீதம் கட்டணம் விதித்தது கூகுள் பே.

இதை Convenience Fee என கூகுள் பே வசூலித்து வருகிறது. இருப்பினும் பில் பேமென்ட்களை டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் செலுத்தும் பயனர்களுக்கு மட்டும் இந்த கட்டணம் இப்போதைக்கு விதிக்கப்படுகிறது. பரிவர்த்தனை தொகையின் மதிப்பில் 0.5% முதல் 1% வரை இந்தக் கட்டணம், ஜிஎஸ்டியுடன் சேர்த்து வசூலிக்கப்படுகிறது.

இந்தியாவில் யுபிஐ வளர்ச்சி என்பது அசாத்தியமானது. இருப்பினும் அதை மேற்கொள்ள உதவும் ஃபின்-டெக் நிறுவனங்கள் தங்களது வருவாயை அதற்கு ஏற்ப ஈடு செய்ய வேண்டி உள்ள காரணத்தால் இந்த வகை கட்டணத்தை நிறுவனங்கள் வசூலிக்கின்றன என துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

போன் பே, பேடிஎம் போன்ற நிறுவனங்களும் மின் கட்டணம் மற்றும் குடிநீர் பயன்பாட்டு கட்டணத்தை டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மூலம் செலுத்தும் பயனர்களிடம் வசூலித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் பெரும்பாலான பயனர்களின் யுபிஐ சாய்ஸாக போன் பே மற்றும் கூகுள் பே இருக்கிறது. இதனால் யுபிஐ மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனை மற்றும் தொகை சார்ந்து இந்த இரண்டு நிறுவனங்களே முதல் இரண்டு இடத்தில் உள்ளன.

கடந்த ஜனவரியில் இந்தியாவில் 16.99 பில்லியன் யுபிஐ பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மொத்த தொகை ரூ.23.48 லட்சம் கோடி. கடந்த ஆண்டு ஜனவரி உடன் ஒப்பிடும்போது இது 39 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது.

இந்தியாவில் நொடிப் பொழுதில் டிஜிட்டல் முறையில் சாமானியர்கள் தொடங்கி அனைத்து தரப்பினரும் பணத்தை பெறவும், அனுப்பவும் உதவுகிறது யுபிஐ பேமென்ட். இது வணிகர்கள், வாடிக்கையாளர்கள் என அனைவருக்கும் சாதகமானதாகவும் உள்ளது. நகரம் முதல் கிராமம் வரை அனைத்து இடங்களிலும் யுபிஐ செயல்பாட்டில் உள்ளது. இதனால், ரொக்கத்தின் பயன்பாடு வெகுவாக குறைந்துள்ளது.

கூகுள் பே, போன் பே, பேடிஎம், அமேசான் பே, BHIM என பல்வேறு செயலிகளின் மூலம் இந்தியாவில் யுபிஐ பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகிறது. நாளுக்கு நாள் இதன் பயனர்கள் மற்றும் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

9 days ago

வணிகம்

9 days ago

வணிகம்

9 days ago

வணிகம்

10 days ago

மேலும்