புதுடெல்லி: இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பு 2023-24-ல் 778.21 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டி வரலாற்று உச்சத்தைக் கண்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பு 2023-24-ல் 778.21 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டி வரலாற்று உச்சத்தைக் கண்டுள்ளது. இது 2013-14-ல் 466.22 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 67% அதிகரிப்பைக் குறிக்கிறது. வணிகப் பொருட்கள், சேவைகள் ஏற்றுமதி ஆகிய இரண்டிலும் வலுவான செயல்திறனால் ஊக்குவிக்கப்பட்டு, உலகளாவிய வர்த்தகத்தில் இந்தியாவின் விரிவாக்கப் பங்கை இந்த வளர்ச்சி பிரதிபலிக்கிறது.
2023-24-ம் ஆண்டில், சரக்கு ஏற்றுமதி 437.10 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. அதே சமயம் சேவைகள் ஏற்றுமதி 341.11 பில்லியன் அமெரிக்க டாலர்களை பங்களித்தது. மின்னணுப் பொருட்கள், மருந்துகள், பொறியியல் பொருட்கள், இரும்பு தாது மற்றும் ஜவுளி போன்ற முக்கிய துறைகள் இந்த எழுச்சியில் முக்கிய பங்கு வகித்தன.
இந்த வேகம், 2024-25 நிதியாண்டிலும் தொடர்ந்தது. 2024 ஏப்ரல்-டிசம்பர் மாதத்தில் ஒட்டுமொத்த ஏற்றுமதி 602.64 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2023 -ம் ஆண்டின் அதே காலகட்டத்தில் 568.36 பில்லியன் அமெரிக்க டாலர்களில் இருந்து 6.03% அதிகரிப்பு. உத்திசார்ந்த, பரந்த கொள்கை நடவடிக்கைகளால் ஏற்றுமதி வலுப்படுத்தப்பட்டுள்ளது.
» “இது மத்திய அரசின் பட்ஜெட்டா, பிஹார் பட்ஜெட்டா?” - காங்கிரஸ் சரமாரி கேள்வி
» சேமிப்பு, முதலீடு, நுகர்வு, வளர்ச்சியை ஊக்குவிக்கும் பட்ஜெட்: பிரதமர் மோடி புகழாரம்
2013-14-ம் ஆண்டில் 314 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த வணிகப் பொருட்களின் ஏற்றுமதி 2023-24-ம் ஆண்டில் 437.10 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. இது வலுவான உற்பத்தித் தளம் மற்றும் அதிகரித்த உலகளாவிய தேவையால் ஏற்பட்டது. 2013-14ல் 152 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த சேவை ஏற்றுமதி 2023-24-ல் 341.11 பில்லியன் டாலராக விரிவடைந்துள்ளது.
2004-05-ல், இந்தியாவின் ஏற்றுமதி முக்கியமாக வட அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், வடகிழக்கு ஆசியா, மேற்கு ஆசியா-வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் மற்றும் ஆசியான் போன்ற பகுதிகளுக்கு அனுப்பப்பட்டன. 2013-14-ம் ஆண்டில், வட அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் மேற்கு ஆசியா ஆகியவை குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டு, இந்தப் பிராந்தியங்களில் ஏற்றுமதி மதிப்புகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டது. 2023-24-ம் ஆண்டில் விரைவாக ஏற்றுமதி அதிகரித்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
வணிகம்
16 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
7 days ago