சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ரூ.60 ஆயிரத்தை தாண்டி, வரலாற்றில் புதிய உச்சத்தை பதிவு செய்தது. ஆபரணத்தங்கம் பவுனுக்கு ரூ.600 உயர்ந்து, ரூ.60,200-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. டிச.8-ம் தேதிக்கு பிறகு, தங்கம் விலை உயர்ந்து வந்தது. ஜன.3-ம் தேதி ரூ.58,080 ஆகவும், ஜன.16-ம் தேதி ரூ.59,120 ஆகவும் இருந்தது. விரைவில் பவுன் தங்கம் ரூ.60 ஆயிரத்தை தொடும் என்று சந்தை நிபுணர்கள், தங்க நகை வியாபாரிகள் கணித்திருந்தனர்.
இந்நிலையில், சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று ரூ.60 ஆயிரத்தை தாண்டி, புதிய விலை உச்சத்தை தொட்டது.
ஆபரணத்தங்கம் ஒரு பவுனுக்கு ரூ.600 உயர்ந்து, ரூ.60,200-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.75 உயர்ந்து, ரூ.7,525 ஆக இருந்தது. 24 காரட் கொண்ட சுத்தத் தங்கம் விலை ரூ.65,672-க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ.104 ஆகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1 லட்சத்து 4 ஆயிரம் ஆகவும் இருந்தது.
» எச்1பி விசா நடைமுறை தொடர்ந்து நீடிக்கும்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சொல்வது என்ன?
» 20 ஆண்டுகளுக்கு முன்பு குரூப்-1 தேர்வு மூலம் டிஎஸ்பியான 28 பேருக்கு ஐபிஎஸ் அந்தஸ்து
தங்கம் விலை உயர்வு குறித்து சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் எஸ்.சாந்தகுமார் கூறியதாவது: சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு வெளியிட்ட அறிவிப்பு ஆகியவை தங்கம் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, அமெரிக்க பொருளாதாரத்தை நிலைநாட்டவும், அமெரிக்க டாலரை வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பால், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, சர்வதேச சந்தையில் ஒரு டிராய் அவுனஸ் தங்கம் (31.10 கிராம்) 2,760 டாலரை தொட்டுள்ளது.
பங்குச்சந்தை சரிவை சந்தித்துள்ளதால், பெரு முதலீட்டாளர்களின் பார்வை தங்கத்தின் மீது திரும்பியுள்ளது. இதனால், தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. இதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலிக்கிறது. வரும் காலங்களில் தங்கம் விலை உயரவே வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், குடும்ப நிகழ்ச்சிக்காக தங்க ஆபரணங்கள் வாங்க திட்டமிட்டிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
வணிகம்
17 hours ago
வணிகம்
17 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago