ட்ரம்ப் பதவியேற்ற முதல் நாளிலேயே இந்திய பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ரூ.7 லட்சம் கோடி இழப்பு

By செய்திப்பிரிவு

இந்திய பங்குச் சந்தைகளில் நேற்று நடைபெற்ற வர்த்தகம் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் 1,235 புள்ளிகள் (1.60%) சரிந்து 75,838-ஆகவும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிப்டி 299 புள்ளிகள் (1.28%) குறைந்து 23,045-ஆகவும் நிலைபெற்றன.

டிரம்ப் அறிவிப்பு எதிரொலி: அமெரிக்க அதிபராக பதவியேற்றுக் கொண்ட கையோடு சொந்த நாட்டின் நலன் கருதி வெளிநாடுகளின் வர்த்தகத்தின் மீது மேலும் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்தது முதலீட்டாளர்களின் நம்பிக்கையில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியது. இது, பங்குச் சந்தைகளில் எதிரொலித்தது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ வங்கி, சோமாட்டோ உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் கணிசமான இழப்பை சந்தித்தன.

ரூ.7.48 லட்சம் கோடி இழப்பு: மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் ஒட்டுமொத்த சந்தை மூலதனம் நேற்றைய வர்த்தகத்தில் ரூ.424.11 லட்சம் கோடியாக குறைந்தது. இதையடுத்து, முதலீட்டாளர்களுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.7.48 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

16 hours ago

வணிகம்

19 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

மேலும்