மதுரை: மூன்றாம் நிலையில் இருந்து 2-ம் நிலைக்கு மதுரை விமான நிலையம் தரம் உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களுரூ, ஹைதராபாத், டெல்லி, மும்பை உள்ளிட்ட உள்நாடுகளுக்கும், துபாய், இலங்கை, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. இரவு நேர விமான சேவையும் தொடங்கியதால் மதுரை விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், மதுரை உள்ளிட்ட 6 விமான நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதில் மதுரை, அகர்தலா, போபால், சூரத், உதயப்பூர், விஜயவாடா ஆகிய விமான நிலையங்கள் மூன்றாம் நிலை தரத்தில் இருந்து 2-ம் தர நிலைக்கு உயர்ந்துள்ளது. அகில இந்திய அளவில் விமான நிலையங்களில் அதிகரித்துள்ள விமான சேவை, விமான பயணிகளின் வருகை ஆய்வு அடிப்படையிலேயே மதுரை உள்பட 6 விமான நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
வணிகம்
30 mins ago
வணிகம்
2 hours ago
வணிகம்
17 hours ago
வணிகம்
18 hours ago
வணிகம்
19 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago