“எங்கள் கவனம் குடும்பங்களை நோக்கி உள்ளது” - ஓயோ நிறுவனர் விளக்கம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: தங்களது கவனம் குடும்பங்களை நோக்கி உள்ளதாக ஓயோ (OYO) நிறுவனர் ரிதேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

பிரபல டிராவல் புக்கிங் தளமான ஓயோ அண்மையில் அதன் செக்-இன் கொள்கையில் முக்கிய மாற்றங்களை மேற்கொண்டது. அதாவது தம்பதியர்கள் ஓயோவின் பார்ட்னர் ஹோட்டல்களில் தங்க வேண்டுமென்றால் திருமணம் ஆனதற்கான உரிய ஆதாரங்களை தருவது அவசியம் என தெரிவித்தது.

இப்போதைக்கு இது மீரட் நகரில் உள்ள ஓயோவின் பார்ட்னர் ஹோட்டல்களில் மட்டுமே நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. படிப்படியாக இதற்கான வரவேற்பினை பொறுத்து நாடு முழுவதும் விரிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் ஓயோ நிறுவனர் ரிதேஷ் அகர்வால், தனியார் ஊடக நிறுவனத்திடம் தெரிவித்தது: “எங்களது தளம் மூலம் பார்ட்னர் ஹோட்டல்களில் தங்குபவர்கள் 70 முதல் 80 சதவீதம் பேர் குடும்பத்தினர்கள் தான் என்கிறது தரவுகள். இதில் வணிக ரீதியாக பயணம் மேற்கொள்பவர்களும் உள்ளனர். இருந்தாலும் சமூக வலைதளங்களில் உலாவும் மீம்களால் எங்கள் தளத்தின் மீதான பார்வை தம்பதியர்கள் அதிகம் பயன்படுத்தும் தளம் என அறியப்படுகிறது. ஆனால், அது அப்படி இல்லை. இருப்பினும் நமது சமூகத்தில் தம்பதியர்கள் விடுதி எடுத்து தங்குவது சவாலாக உள்ளது. அதை மறுப்பதற்கு இல்லை.

அயோத்தி, வாராணசி, ராமேஸ்வரம் என எங்களது தளம் வழிபாட்டுத் தளங்கள் அதிகம் உள்ள இடங்களில் விரிவடைந்து வருகிறது. இந்த சூழலில் எங்களது வளர்ச்சிக்கு மத்தியில் சவால்களும் உள்ளன. அதில் இந்த மீம் கண்டென்ட்டும் அடங்கும். இதற்கு நாங்கள் நேரடியாக பதில் தரவே விரும்புகிறோம். அது எங்களது செயல்பாட்டின் மூலம் இருக்கும்.

மத்திய இந்தியாவில் உள்ள மாநிலங்களில் குடும்பங்கள் அதிகம் பயன்படுத்தும் தளமாக ஓயோ உள்ளது. எங்களது பிராண்டுக்கு என மதிப்பு உள்ளது. இந்த மீம்கள் எல்லாம் நகரப்பகுதியில் மட்டுமே டிஜிட்டல் வடிவில் உள்ளது. அவ்வளவு தான். எங்கள் தளத்தின் மீதான பார்வை மாற தொடங்கி உள்ளது. இதற்கு பார்ட்னர் ஹோட்டல்கள் தான் காரணம்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

17 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

7 days ago

மேலும்