கலிபோர்னியா: கூகுள் நிறுவனத்தில் நிர்வாக ரீதியாக பணியாற்றி வரும் ஊழியர்களில் சுமார் 10 சதவீதம் பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உலக அளவில் முன்னணி டெக் நிறுவனமாக கூகுள் அறியப்படுகிறது. இதில் லட்சக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். கரோனா நோய் தொற்று பரவலுக்கு பின்னர் பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையை கையில் எடுத்தன. அதில் கூகுள் நிறுவனமும் ஒன்று. கடந்த ஆண்டு கூட ஆயிரக்கணக்கான (சுமார் 12,000 பேர்) ஊழியர்களை பணியிலிருந்து கூகுள் நீக்கி இருந்தது.
அந்நிறுவனத்தில் சுமார் 1.82 லட்சம் பேர் பணியாற்றி வருவதாக கடந்த ஆண்டு வெளியான தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது கூகுளில் நிர்வாக ரீதியாக பல துறைகளில் இயக்குனர் மற்றும் துணைத் தலைவர் பொறுப்புகளில் உள்ள ஊழியர்களில் சுமார் 10 சதவீதம் பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தங்கள் நிறுவன செயல்பாட்டை செம்மைப்படுத்தவும், செயல்திறனை மேம்படுத்தவும், டெக் துறையில் நிலவி வரும் ஏஐ சார்ந்த நுட்பம் உள்ளிட்ட சவால்களை சமாளிக்கவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக சுந்தர் பிச்சை சொல்லியுள்ளதாக கூறப்படுகிறது.
» ‘‘நெல்லை கொலையில் இதுவரை 4 பேர் கைது’’ - எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி பதில்
» கன்னியாகுமரி கண்ணாடி கூண்டு பால பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் எ.வ.வேலு
கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆட்குறைப்பு நடவடிக்கையில் கூகுள் ஈடுபட்டு வருகிறது. அதே நேரத்தில் ஏஐ மற்றும் ஆட்டோமேஷன் சார்ந்து முதலீடுகளை அந்நிறுவனம் மேற்கொண்டு வருவது கவனிக்கத்தக்கது.
முக்கிய செய்திகள்
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago