சிறு ஐடி நிறுவனங்களுக்கு வாடகைக்கு இடம் தர புதுச்சேரி அரசு திட்டம்!

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: சிறு ஐடி நிறுவனங்கள் செயல்பட பணியாற்றும் இடத்தை தர அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக புதுச்சேரி அரசில் பயன்பாட்டில் இல்லாத கட்டிடங்கள் கணக்கெடுப்பு நடத்துகிறோம் என்று பொதுப்பணித் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் குறிப்பிட்டார்.

சிஐஐ சார்பில் புதுச்சேரியின் தொழில்துறை கண்காட்சி இண்டெக்ஸ் 2024 சுகன்யா கன்வெக்சன் சென்டரில் இன்று துவங்கியது. புதுச்சேரியின் உற்பத்தித் திறன்களைக் காண்பிக்கும் வகையில் இக்கண்காட்சி இரண்டு நாட்கள் நடக்கும். இதில் 70-க்கும் மேற்பட்ட அனைத்து நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இக்கண்காட்சியை அமைச்சர் லட்சுமி நாராயணன் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தொழில்துறை இயக்குநர் ருத்ர கவுடு, சிஐஐ புதுச்சேரி பிராந்திய தலைவர் சண்முகானந்தம், துணைத் தலைவர் ஷமீர் காம்ரா, இன்டெக்ஸ் தலைவர் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக சன்வே ஹோட்டலில் நடந்த தொடக்கநிகழ்ச்சியில் அமைச்சர் லட்சுமி நாராயணன் பேசியது: ''எளிதாக தொழில் செய்யும் சீர்திருத்தங்கள் தொடர்பான மசோதா தயாரிக்கப்பட்டு அமைச்சரவையில் ஒப்புதல் தரப்பட்டு சட்டமாக்க மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன் மூலம் தொழில்முனைவோர் தொழில் தொடங்க காத்திருக்கவேண்டியதில்லை. வரும் பட்ஜெட்டில் இதுதொடர்பான அறிவிப்பு வரவாய்ப்புள்ளது. புதுச்சேரியில் ஐடி நிறுவனங்கள் 160 வரை உள்ளன. சிறு ஐடி நிறுவனங்கள் செயல்பட அரசு பணியாற்றும் இடத்தை குறைந்த வாடகையில் தர திட்டமிட்டுள்ளது.

இதற்காக புதுச்சேரி அரசில் பயன்பாட்டில் இல்லாத கட்டடங்கள் கணக்கெடுப்பு நடக்கிறது. அரசு குடியிருப்புகள், பள்ளிகள் உட்பட பயன்படுத்தாத அரசு கட்டடங்களை சரி செய்து இந்த இடங்களை ஐடி நிறுவனங்கள் பணியாற்ற தந்தால் வேலைவாய்ப்பும் பெருகும், அரசுக்கு வருவாயும் கிடைக்கும். புதுச்சேரிக்கு வரும் 2030-ல் சுற்றுலா வருவோர் எண்ணிக்கை 30 லட்சமாக உயரும் என எதிர்பார்க்கிறோம். ரூ. 600 கோடி அளவுக்கு சாலைகள் மேம்படுத்தியுள்ளோம்.

குறிப்பாக, புதுச்சேரி ராஜீவ் காந்தி சிலையில் இருந்து மரப்பாலம் வரை ஒரே மேம்பாலம் அமைக்க மீண்டும் வரைப்படத்தில் மாற்றத்தை செய்து மத்திய அரசுக்கு தந்துள்ளோம். திட்ட அறிக்கை தயார் செய்துள்ளோம். விரைவில் அனுமதி பெற்று இப்பணி துவங்கும். அதேபோல் கடலூர் சாலை விரிவாக்கமும் நடக்கவுள்ளது. அரும்பார்த்தபுரம் பைபாஸ் சாலை பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதால் நெரிசலின்றி விரைவில் விழுப்புரம் செல்ல முடியும்'' என்று குறிப்பிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

10 hours ago

வணிகம்

15 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

மேலும்