தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 குறைந்தது

By செய்திப்பிரிவு

சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 குறைந்தது. சென்னையில் இன்று (நவ.28) காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.7090-க்கும், பவுனுக்கு ரூ.120 குறைந்து ஒரு பவுன் ரூ.56,720-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.98-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில், தங்கம் விலை கடந்த மாதம் 16-ம் தேதி ஒரு பவுனுக்கு ரூ.55 ஆயிரத்துக்கு விற்பனையானது. பின்னர், படிப்படியாக அதிகரித்து தீபாவளி சமயத்தில் ஒரு பவுன் ரூ.59 ஆயிரமாக புதிய உச்சத்தை எட்டியது. பின்னர் மீண்டும் குறையத் தொடங்கியது.

இந்த மாதம் முழுவதும் ஏற்ற, இறக்கங்களோடு இருந்த நிலையில் இந்த வாரத் தொடக்கத்திலிருந்து முதல் இரண்டு நாளில் பவுனுக்கு ரூ.1,760 குறைந்ததால் நகை வாங்குவோர் மகிழ்ச்சியடைந்தனர். நேற்று நவ.27 சிறிய உயர்வைக் கண்ட நிலையில் இன்று மீண்டும் பவுனுக்கு ரூ.120 குறைந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

9 hours ago

வணிகம்

12 hours ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

6 days ago

மேலும்