சென்னை: தங்கம் நேற்று பவுனுக்கு ரூ.960 குறைந்து ரூ.56,640-க்கு விற்பனையானது. கடந்த 2 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,760 குறைந்ததால், நகை வாங்குவோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில், தங்கம் விலை நேற்று குறைந்தது. இதன்படி, தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.120 குறைந்து ரூ.7,080-க்கும், பவுனுக்கு ரூ.960 குறைந்து ரூ.56,640-க்கும் விற்பனையானது. தங்கம் விலை கடந்த மாதம் 16-ம் தேதி ஒரு பவுனுக்கு ரூ.55 ஆயிரத்துக்கு விற்பனையானது. பின்னர், படிப்படியாக அதிகரித்து தீபாவளி சமயத்தில் ஒரு பவுன் ரூ.59 ஆயிரமாக புதிய உச்சத்தை எட்டியது. பின்னர் மீண்டும் குறையத் தொடங்கியது. கடந்த 17-ம் தேதி பவுன் விலை ரூ.55,480 ஆக இருந்தது.
பின்னர், படிப்படியாக அதிகரித்து கடந்த 24-ம் தேதி ரூ.58,400 ஆக விற்பனையானது. இந்நிலையில், கடந்த 2 நாட்களில் தங்கம் பவுனுக்கு ரூ.1,760 குறைந்துள்ளது. இதனால், தங்கம் வாங்குவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ரூ.60,680-க்கு விற்பனையானது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.98-க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.98,000 ஆக இருந்தது.
முக்கிய செய்திகள்
வணிகம்
6 hours ago
வணிகம்
9 hours ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
6 days ago