மும்பை: மும்பை பங்குச்சந்தையில் வெள்ளிக்கிழமை வர்த்தகம் நிறைவடையும்போது, சென்செக்ஸ் 1,960 புள்ளிகள் ஏற்றம் கண்டிருந்தன. அதானி நிறுவனப் பங்குகளும் மீண்டு வருகின்றன.
அமெரிக்கா வெளியிட்ட வேலைவாய்ப்பு குறித்த சாதகமான தரவுகள் பங்குச் சந்தை எழுச்சி காண பெரிதும் உதவின. அமெரிக்காவிலிருந்து அதிக வருவாய் ஈட்டும் ஐடி துறையைச் சேர்ந்த பங்குகளுக்கு வரவேற்பு காணப்பட்டது. குறிப்பாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்போசிஸ், டிசிஎஸ், ஐடிசி, ஐசிஐசிஐ வங்கி, எல் அண் டி , எஸ்பிஐ பங்குகளின் விலை அதிகரித்ததால் சென்செக்ஸ் 1,150 புள்ளிகள் ஏற்றம் பெற உதவியது. பார்தி ஏர்டெல், எச்சிஎல் டெக், மஹிந்திரா, பாஜஜ் பைனான்ஸ் பங்குகளையும் முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் வாங்கி குவித்தனர்.
ஐடி துறை குறியீடு 3.3 சதவீதமும், பொதுத் துறை வங்கி குறியீடு 3 சதவீதமும் அதிகரித்தன. வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் 1,960 புள்ளிகள் அதிகரித்து 79,117 புள்ளிகளாகவும், நிஃப்டி 557 புள்ளிகள் உயர்ந்து 23,900 புள்ளிகளிலும் நிலைத்தன. இதைத் தொடர்ந்து, பங்குச் சந்தையில் பட்டியலாகியுள்ள நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ.7.2 லட்சம் கோடி உயர்ந்து ரூ.432.57 லட்சம் கோடியைத் தொட்டது.
மீண்ட அதானி பங்குகள்: அதானிக்கு அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்ததைத் தொடர்ந்து வியாழக்கிழமை வர்த்தகத்தில் அதானி குழும பங்குகள் 23 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் அவை 6 சதவீதம் வரை மீண்டெழுந்தன. குறிப்பாக, அம்புஜா சிமெண்ட் 6 சதவீதம், ஏசிசி 4 சதவீதம், அதானி எண்டர்பிரைசஸ் 2.5 சதவீதம் ஏற்றம் பெற்றன.
முக்கிய செய்திகள்
வணிகம்
4 hours ago
வணிகம்
4 hours ago
வணிகம்
8 hours ago
வணிகம்
14 hours ago
வணிகம்
20 hours ago
வணிகம்
20 hours ago
வணிகம்
20 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago