அதானி குழுமம் உடனான ஒப்பந்தங்களை ரத்து செய்தது கென்யா!

By செய்திப்பிரிவு

நைரோபி: இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி, தங்கள் நாட்டு முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் அமெரிக்கா குற்றச்சாட்டு வைத்துள்ள நிலையில், அந்த நிறுவனத்துடனான தொழில் ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக கென்ய அதிபர் வில்லியம் ரூட்டோ அறிவித்துள்ளார். கென்யாவின் பிரதான விமான நிலையத்தை பராமரிக்கும் ஒப்பந்தம் மற்றும் 30 ஆண்டு காலத்துக்கு கென்ய எரிசக்தி துறையை நிர்வகிக்கும் வகையிலான 736 டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தையும் ரத்து செய்துள்ளது. இந்த ஒப்பந்தம் கடந்த மாதம் தான் கையெழுத்தானது என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து அதிபர் ரூட்டோ நிகழ்த்திய தேசிய உரையில், ”தற்போது அமலில் உள்ள ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்யுமாறு போக்குவரத்து அமைச்சகம் மற்றும் எரிசக்தி மற்றும் பெட்ரோலிய அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நிறுவனங்களுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள் பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டன. இந்தியப் பங்குச்சந்தையின் போக்கு இன்று காலை தொட்டே கடும் வீழ்ச்சியை சந்தித்து சரிவுடனேயே முடிந்தது. இந்நிலையில், கென்யாவின் அறிவிப்பு உலகளவில் கவனம் பெற்றுள்ளது.

குற்றச்சாட்டும் வாரன்ட்டும்: துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலக்கரி, மின் உற்பத்தி மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வருகிறார் அதானி குழும நிறுவனத் தலைவர் கவுதம் அதானி. 62 வயதான அவர் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். தற்போது இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார். உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராகவும் திகழ்கிறார். அவர் மீது அமெரிக்க செக்யூரிட்டி கவுன்சில் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.

அமெரிக்காவில் சூரிய சக்தி திட்டத்தில் முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் கவுதம் அதானி மீது குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டுள்ளன. அதானி, அவரது உறவினர் சாகர் அதானி உள்ளிட்ட 7 பேர் சுமார் 265 மில்லியன் டாலர்களை லஞ்சமாக இந்திய அதிகாரிகளுக்கு வழங்க ஒப்புக்கொண்டதாக அந்த ஆணையம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் 20 ஆண்டுகளில் 2 பில்லியன் டாலர் லாபம் ஈட்டும் ஒப்பந்தத்தை அவர்கள் பெற முடியும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த குற்றச்சாட்டை அடுத்து நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது.

இந்தத் திட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் பல பில்லியன் டாலர்களை முதலீடு செய்த ‘வால் ஸ்ட்ரீட்’ (அமெரிக்க பங்குச்சந்தை) முதலீட்டாளர்களை அதானி குழுமம் ஏமாற்றி உள்ளது என ஆணையம் தெரிவித்துள்ளது.இந்தச் செய்தியை அடுத்து அதானி க்ரீன் எனர்ஜி பத்திரங்கள் மூலம் சுமார் 600 மில்லியன் டாலர்களை திரட்டும் திட்டத்தை ரத்து செய்தது.

அதானி குழுமம் மறுப்பு: இது தொடர்பாக அதானி குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதானி கிரீன் நிறுவனத்தின் இயக்குநர்களுக்கு எதிராக அமெரிக்க நீதித்துறை மற்றும் அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் ஆகியவற்றின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. இந்த குற்றச்சாட்டுக்களை நாங்கள் மறுக்கிறோம்.

"குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் வரை குற்றம் சாட்டப்பட்டவர்கள் நிரபராதிகளாக கருதப்படுவார்கள்" என்று அமெரிக்க நீதித்துறையே கூறி இருக்கிறது. எனவே, சாத்தியமான அனைத்து சட்ட வழிகளும் ஆராயப்படும். அதானி குழுமம் எப்பொழுதும் உயர்ந்த தரமான நிர்வாகம், வெளிப்படைத்தன்மை மற்றும் ஒழுங்குமுறையை பராமரிப்பதில் உறுதியாக உள்ளது. எங்கள் பங்குதாரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நாங்கள் ஒரு சட்டத்தை மதிக்கும் அமைப்பு, அனைத்து சட்டங்களுக்கும் முழுமையாக இணங்குகிறோம் என்று உறுதியளிக்கிறோம்” என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

15 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

8 days ago

மேலும்