மீண்டும் தொடங்குகிறது இந்தியா - இங்கிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை

By செய்திப்பிரிவு

ரியோ டி ஜெனிரோ: இந்தியா - இங்கிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க இரு நாடுகளும் திட்டமிட்டிருப்பதாக வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற ஜி-20 உச்சிமாநாட்டின் ஊடாக, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இங்கிலாந்து பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் இடையேயான சந்திப்பைத் தொடர்ந்து, புத்தாண்டில் இந்தியா - இங்கிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான இங்கிலாந்தின் அறிவிப்பை நாங்கள் வரவேற்கிறோம்.

சமநிலையான, பரஸ்பரம் பயனளிக்கும் மற்றும் முன்னோக்கிய பார்வையுடைய தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை அடைவதன் முக்கியத்துவத்தைக் கவனத்தில் கொண்டு, பரஸ்பர திருப்தியுடன் மீதமுள்ள பிரச்சனைகளுக்குத் தீர்வு காண இங்கிலாந்தின் பேச்சுவார்த்தைக் குழுவுடன் நெருக்கமாகப் பணியாற்றுவதை இந்தியா எதிர்நோக்கியுள்ளது.

2025-ம் ஆண்டின் தொடக்கத்தில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளுக்கான தேதிகள் ராஜதந்திர வழிமுறை மூலம் விரைவில் இறுதி செய்யப்படும். சுதந்திர வர்த்தக உடன்படிக்கை பேச்சுவார்த்தைகள் முன்னர் அடைந்த முன்னேற்றத்திலிருந்து விவாதங்களை மீண்டும் தொடங்கும். மேலும் வர்த்தக ஒப்பந்தத்தை விரைவாக முடிப்பதற்கான இடைவெளிகளை நிரப்ப முயற்சிக்கும்.

இங்கிலாந்துடனான இந்தியாவின் வர்த்தக உறவு தொடர்ந்து சீராக வளர்ந்து வருவதுடன், ஆழமான ஒத்துழைப்பு மற்றும் ராஜீய ஈடுபாட்டிற்கான மகத்தான ஆற்றலையும் வெளிப்படுத்துகிறது. 2024 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான சமீபத்திய தரவுகளின்படி, இங்கிலாந்திற்கான இந்தியாவின் ஏற்றுமதி 12.38% என்ற வலுவான வளர்ச்சியைக் கண்டுள்ளது. இது 7.32 பில்லியன் டாலர் மதிப்பு கொண்டது. 2023-ம் ஆண்டின் இதே காலகட்டத்தில் இது 6.51 பில்லியன் டாலராக இருந்தது.

கனிம எரிபொருட்கள், இயந்திரங்கள் மற்றும் விலைமதிப்பற்ற கற்கள், மருந்துகள், ஆடைகள், இரும்பு மற்றும் எஃகு, ரசாயனங்கள் ஆகியவை இங்கிலாந்திற்கான இந்தியாவின் ஏற்றுமதியை வழிநடத்துகின்றன. இது மொத்த ஏற்றுமதியில் 68.72% பங்களிக்கிறது. 2029-30 ஆம் ஆண்டுக்குள் இங்கிலாந்துக்கான எங்கள் ஏற்றுமதி 30 பில்லியன் டாலரை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுவதால், 2030-ம் நிதியாண்டில் எங்கள் லட்சியமான 1 டிரில்லியன் டாலர் ஏற்றுமதி இலக்கை அடைவதற்கு இங்கிலாந்து முன்னுரிமை நாடாகும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

3 hours ago

வணிகம்

3 hours ago

வணிகம்

5 hours ago

வணிகம்

9 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

மேலும்