சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவ.20) பவுனுக்கு ரூ.400 என உயர்ந்துள்ளது. இதனால் ஒரு பவுன் தற்போது ரூ.56,920க்கு விற்பனையாகி வருகிறது. மூன்று நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,440 என உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,115-க்கும், பவுனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு பவுன் ரூ.56,920-க்கும் விற்பனை. வெள்ளியின் விலையில் எந்தவித மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.101-க்கு விற்பனையாகிறது.
கடந்த வாரம் தங்கத்தின் விலை குறைந்திருந்த நிலையில் இந்த வாரம் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விலையேற்றம் நடுத்தர மக்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.
சர்வதேச பொருளாதார நிலை மற்றும் வணிக சந்தையின் நிலவரத்தின்படி தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. உலக அளவில் தங்கத்தை அதிகம் வாங்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
வணிகம்
9 hours ago
வணிகம்
17 hours ago
வணிகம்
20 hours ago
வணிகம்
20 hours ago
வணிகம்
22 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago