புதுடெல்லி: டெல்லிள்ள இந்திய ஊழியர்களில் 63 சதவீதம் பேர் அங்கீகாரத்துக்காக ஏங்குகின்றனர் என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச வேலைவாய்ப்பு இணையதளமான 'இன்'டீட்' இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வருகிறது. இந்த இணையதளம் இந்தியாவின் பணிச்சூழல் குறித்து கருத்துக் கணிப்பு நடத்தி விரிவான ஆய்வறிக்கையை வெளியிட்டு உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
இந்தியா முழுவதும் பல்வேறு நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களின் கருத்துகளை கேட்டறிந்தோம். 30 சதவீத உரிமையாளர்கள், 70 சதவீத ஊழியர்கள் என்ற வகையில் கருத்துக் கணிப்பை நடத்தினோம். எங்களது கருத்துக் கணிப்பின்படி இந்திய ஊழியர்களில் 63 சதவீதம் பேர் அங்கீகாரத்துக்காக ஏங்குகின்றனர். குறிப்பாக, மூத்த அதிகாரிகள் தங்களது திறமையை அங்கீகரிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர்.
சுமார் 48 சதவீத இந்திய ஊழியர்கள் தங்கள் நிறுவனம் குறித்து பெருமிதம் கொள்கின்றனர். மீதமுள்ளோர் நிறுவனத்தின் மீது ஏதோ ஒரு வகையில் அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். பணியிடத்தில் சுமார் 12 சதவீத பெண் ஊழியர்கள் பாலின வேறுபாட்டை எதிர்கொள்வதாக புகார் தெரிவித்து உள்ளனர். ஆண் ஊழியர்களை பொறுத்தவரை இது 9 சதவீதமாக உள்ளது.
» ஹரியானாவில் 1,500 கிலோ எடை கொண்ட ‘காஸ்ட்லி’ எருமைக்கு ஒரு நாள் செலவு ரூ.1,500
» மைக் டைசன் Vs ஜேக் பால் குத்துச்சண்டை போட்டியை நேரலையில் ஒளிபரப்பும் நெட்ஃபிளிக்ஸ்
ஊழியர்களை போன்று நிறுவன உரிமையாளர்களிடமும் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. சுமார் 47 சதவீத உரிமையாளர்கள், தங்கள் ஊழியர்கள் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளனர். சுமார் 36 சதவீத உரிமையாளர்கள், தங்கள் ஊழியர்கள் மீது சில விவகாரங்களில் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.
ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளின் அடிப்படையில் சில கருத்துகளை முன்வைக்கிறோம். பணியிடங்களில் ஊழியர்களுக்கு உகந்த சூழலை உரிமையாளர்கள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். ஊழியர்களை மதிக்க வேண்டும். அவர்கள் தங்கள் முழுத்திறனை வெளிப்படுத்த ஊக்கம் அளிக்க வேண்டும். ஊழியர்கள், உரிமையாளர்கள் இடையே இடைவெளி இருக்கக்கூடாது. இருதரப்புக்கும் இடையே வலுவான பிணைப்பு இருக்க வேண்டும் என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முக்கிய செய்திகள்
வணிகம்
10 hours ago
வணிகம்
19 hours ago
வணிகம்
22 hours ago
வணிகம்
22 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago