200 ஜிகாவாட்டை தாண்டிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி - புதிய மைல்கல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் குறிப்பிடத்தக்க மைல்கல் எட்டப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் 200 ஜிகாவாட்டைத் தாண்டியுள்ளது.

இது தொடர்பாக புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியா தனது புதுப்பிக்கத்தக்க எரிசக்திப் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. நாட்டின் மொத்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் 200 ஜிகாவாட்டைத் தாண்டியுள்ளது. இந்த குறிப்பிடத்தக்க வளர்ச்சி 2030-ம் ஆண்டளவில் புதைபடிவம் அல்லாத ஆதாரங்களில் இருந்து 500 ஜிகாவாட்டை அடைய வேண்டும் என்ற நாட்டின் லட்சிய எரிசக்தி இலக்கை நோக்கிச் செல்கிறது.

மத்திய மின்சார ஆணையத்தின் தகவல்படி, மொத்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அடிப்படையிலான மின்சார உற்பத்தி திறன் இப்போது 203.18 ஜிகாவாட்டாக உள்ளது. இந்த சாதனை தூய்மையான எரிசக்திக்கான இந்தியாவின் வளர்ந்து வரும் உறுதிப்பாட்டையும், பசுமையான எதிர்காலத்தை உருவாக்குவதில் அதன் முன்னேற்றத்தையும் எடுத்துக் காட்டுகிறது.

இந்தியாவின் மொத்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவப்பட்ட திறன் ஒரு வருடத்தில் 24.2 ஜிகாவாட் (13.5%) அதிகரித்து, அக்டோபர் 2024-ல் 203.18 ஜிகாவாட்டை எட்டியது. இது அக்டோபர் 2023-ல் 178.98 ஜிகாவாட்டாக இருந்தது. இதுதவிர, அணுசக்தியையும் சேர்த்தால், இந்தியாவின் மொத்த புதைபடிவம் அல்லாத எரிசக்தித் திறன் 2024-ல் 211.36 ஜிகாவாட். இது 2023-ல் 186.46 ஜிகாவாட்டாக இருந்தது.

இந்தியாவின் இயற்கை வளங்களைப் பயன்படுத்துவதற்கான பல ஆண்டுகால அர்ப்பணிப்பு முயற்சிகளின் விளைவாக இந்த மைல்கல் எட்டப்பட்டுள்ளது. பரந்த சூரிய பூங்காக்கள் முதல் காற்றாலை பண்ணைகள், நீர்மின் திட்டங்கள் வரை, நாடு ஒரு மாறுபட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தளத்தை சீராக உருவாக்கியுள்ளது. இந்த முன்முயற்சிகள் புதைபடிவ எரிபொருள்களை நம்பியிருப்பதைக் குறைத்தது மட்டுமல்லாமல், நாட்டின் எரிசக்தி பாதுகாப்பையும் வலுப்படுத்தியுள்ளன.

இந்தியாவில் பல மாநிலங்கள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனில் முன்னணி மாநிலங்களாக உருவெடுத்து, நாட்டின் முன்னேற்றத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வருகின்றன. ராஜஸ்தான் 29.98 ஜிகாவாட் நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக குஜராத் 29.52 ஜிகாவாட் உற்பத்தித் திறனைக் கொண்டுள்ளது. இது சூரிய மற்றும் காற்றாலை மின் திட்டங்களில் வலுவான கவனம் செலுத்துகிறது. தமிழ்நாடு, 23.70 ஜிகாவாட் மின் உற்பத்தியுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. 22.37 ஜிகாவாட் திறனுடன் கர்நாடகா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

49 mins ago

வணிகம்

2 hours ago

வணிகம்

7 hours ago

வணிகம்

13 hours ago

வணிகம்

13 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

மேலும்