தங்கம் விலை மீண்டும் சரிவு: இன்று பவுனுக்கு ரூ.320 குறைந்தது

By செய்திப்பிரிவு

சென்னை: தங்கம் விலை நேற்று (நவ.12) ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,080 குறைந்து நகை வாங்குவோரை மகிழ்ச்சியில் ஆழ்த்திய நிலையில், இன்று (நவ.13) பவுனுக்கு மேலும் ரூ.320 குறைந்து ஒரு பவுன் ரூ.56,360-க்கு விற்பனையாகிறது. ஆனால் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 அதிகரித்து இரு கிராம் ரூ.101-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. கடந்த மாதம் 16-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.55 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. பின்னர் படிப்படியாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது.

தீபாவளிக்கு முந்தைய தினமான அக்.30-ம் தேதி பவுன் ரூ.59,520-க்கும் அதிகரித்து வரலாற்று உச்சத்தை எட்டியது. பின்னர், தங்கம் விலை படிப்படியாக குறையத் தொடங்கியது. இந்நிலையில், தங்கம் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,080 குறைந்து ரூ.56,680-க்கு விற்பனையானது. இதனால், நகை வாங்குவோர் மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர்ந்து இன்று நவ.13 சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.7,045-க்கும், பவுனுக்கு ரூ.320 குறைந்து ஒரு பவுன் ரூ.56,360-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 அதிகரித்து இரு கிராம் ரூ.101-க்கு விற்பனையாகிறது. கடந்த 13 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.3280 குறைந்துள்ளது கவனிக்கத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

1 hour ago

வணிகம்

6 hours ago

வணிகம்

7 hours ago

வணிகம்

15 hours ago

வணிகம்

18 hours ago

வணிகம்

21 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

மேலும்