கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவில் சில்லரை பணவீக்கம் 6.21% ஆக அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியாவில் செப்டம்பர் மாதத்தில் 5.49 சதவீதமாக இருந்த சில்லரை பணவீக்கம், அக்டோபர் மாதத்தில் 6.21 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு சில்லரை பணவீக்கம் அதிகரித்துள்ளது கவனிக்கத்தக்கது. குறிப்பாக, உணவு பொருட்களின் விலை உயர்வால் பணவீக்கம் அதிகரித்துள்ளது.

ஒப்பீட்டளவில் சில்லரை பணவீக்கம் 2024 ஆகஸ்ட் மாதத்தில் 3.65 சதவீதமாகவும், ஜூலை மாதத்தில் 3.54 சதவீதமாகவும் இருந்தது. அக்டோபர் மாதத்தில் இந்த சில்லரை பணவீக்க உயர்வு, இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) 6 சதவீதம் என்ற மதிப்பீட்டின் அளவை விட அதிகரித்துள்ளது.

ஜூலைக்கு பின்பு முதல் முறையாக செப்டம்பர் மாதத்தில் சில்லரை பணவீக்கம் ஆர்பிஐ-யின் இடைக்கால மதிப்பீடான 4 சதவீதக்தை விட உயர்ந்திருந்தது. அரசின் தரவுகளின்படி, ஓர் ஆண்டுக்கு (அக்டோபர் 2023) முன்பு இந்தியாவின் சில்லரை பணவீக்கம் 4.87 சதவீதமாக இருந்தது. அதன்பின், செப்டம்பர் மாதத்தில் 5.49 சதவீதமாக இருந்த இந்தியாவின் சில்லரை பணவீக்கம், அக்டோபர் மாதத்தில் 6.21 சதவீதமாக அதிகரித்துள்ளது.

உணவுப் பொருள்கள் சார்ந்த பணவீக்கம் அக்டோபரில் 9.69 சதவீதமாக உச்சம் அடைந்துள்ளது. இது செப்டம்பர் மாதத்தில் 9.24 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கிராமப்புற சில்லரை பணவீக்கமும் 6.68 சதவீதமாக அதிகரித்துள்ளது. முந்தைய மாதம் இது 5.87 சதவீதமாக இருந்தது. அதேபோல் நகர்ப்புற பணவீக்கமும் அக்டோபரில் 5.26 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது செப்டம்பர் மாதத்தில் 5.05 சதவீதமாக இருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

22 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

8 days ago

மேலும்