சென்னை: சென்னையில் தங்கம் விலை இன்று (நவ.12) அதிரடியாக பவுனுக்கு ரூ.1.080 குறைந்துள்ளது. வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ.2 குறைந்துள்ளது.
சென்னையில், இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.135 குறைந்து ஒரு கிராம் ரூ.7,085-க்கும், பவுனுக்கு ரூ.1,080 குறைந்து ஒரு பவுன் ரூ.56,680-க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ.2 குறைந்து ஒரு கிராம் ரூ.100-க்கு விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, கடந்த மார்ச் 28-ம் தேதி ஒரு பவுன் ரூ.50 ஆயிரம் என்ற வரலாறு காணாத உயர்வை எட்டியது.
இதைத் தொடர்ந்து விலை உயர்ந்து வந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் 23-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதனால் அன்றைய தினம் பவுனுக்கு ரூ.2,080 குறைந்தது. பின்னர் தங்கம் விலை ஏறுமுகமாகவே இருந்தது. குறிப்பாக தீபாவளி நாளன்று (அக்.31) ரூ.59,640 என்ற வரலாறு காணாத உச்சத்தை அடைந்தது.
» சுய உதவிக் குழுக்களின் தேனீ வளர்ப்பு தொகுப்புகளுக்கு ரூ.2.22 கோடி நிதி - தமிழக அரசு
» மழை, பனியால் திராட்சை விற்பனை சரிவு: தேனி விவசாயிகள் பாதிப்பு
அதன் பின்னர் ஏற்ற இறக்கமாக இருந்த தங்கத்தின் விலை, நவ.7 அதிரடியாக குறைந்தது. அதன்படி, பவுனுக்கு ரூ.1,320 குறைந்து ஒரு பவுன் தங்கம் ரூ.57,600-க்கு விற்பனையானது. அதன்பின்னர் குறையத் தொடங்கிய தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.1,080 குறைந்து ஒரு பவுன் ரூ.56,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 12 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,960 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
வணிகம்
2 hours ago
வணிகம்
2 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago