தங்கம் விலை பவுனுக்கு ரூ.440 குறைந்தது

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவ.11) பவுனுக்கு ரூ.440 குறைந்தது. இன்றைய நிலவரப்படி கிராமுக்கு ரூ.55 குறைந்து ஒரு கிராம் ரூ.7,220-க்கும், பவுனுக்கு ரூ.440 குறைந்து ஒரு பவுன் ரூ.57,760-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.103-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, கடந்த மார்ச் 28-ம் தேதி ஒரு பவுன் ரூ.50 ஆயிரம் என்ற வரலாறு காணாத உயர்வை எட்டியது.

இதைத் தொடர்ந்து விலை உயர்ந்து வந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் 23-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதனால் அன்றைய தினம் பவுனுக்கு ரூ.2,080 குறைந்தது. பின்னர் தங்கம் விலை ஏறுமுகமாகவே இருந்தது. குறிப்பாக தீபாவளி நாளன்று (அக்.31) ரூ.59,640 என்ற வரலாறு காணாத உச்சத்தை அடைந்தது.

அதன் பின்னர் ஏற்ற இறக்கமாக இருந்த தங்கத்தின் விலை, நவ.7 அதிரடியாக குறைந்தது. அதன்படி, பவுனுக்கு ரூ.1,320 குறைந்து ஒரு பவுன் தங்கம் ரூ.57,600-க்கு விற்பனையானது. அதன்பின்னர் குறையத் தொடங்கிய தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.440 குறைந்து ஒரு பவுன் ரூ.57,760-க்கு விற்பனையாகிறது. கடந்த 11 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,880 குறைந்துள்ளது. பண்டக சந்தையில் முதலீட்டாளர்கள் லாபத்தை பதிவு செய்து வருவதே தங்கம் விலை குறைய காரணம் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

13 hours ago

வணிகம்

13 hours ago

வணிகம்

20 hours ago

வணிகம்

19 hours ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

7 days ago

மேலும்