நிதி நெருக்கடியால் திவாலான ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை கலைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நிதி நெருக்கடி காரணமாக திவாலான ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை கலைக்க சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

நிதி நெருக்கடியால் 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது விமான சேவையை நிறுத்தியது. திவால் நடவடிக்கையை தொடர்ந்து தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (என்சிஎல்ஏடி) ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை மீட்டெடுக்க அனுமதி வழங்கியது.

இதைத்தொடர்ந்து, ஜலான் கல்ராக் கூட்டமைப்பு (ஜேகேசி) ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை வாங்கியது. முதல் தவணையாக ரூ.350 கோடி செலுத்த வேண்டியிருந்த நிலையில் ரூ.200 கோடியை மட்டுமே செலுத்தியது.

ஆனால், ஜெட் ஏர்வேஸுக்கு கொடுத்த கடன் திருப்பி செலுத்தப்படாத நிலையில் கனரா வங்கி,எஸ்பிஐ, பிஎன்பி உள்ளிட்ட வங்கிகள் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை ஜேகேசி கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்குதொடர்ந்தன. இந்த நடைமுறையில் விதிகள் எதுவும் பின்பற்றப்படவில்லை என்று அந்த வங்கிகள் குற்றம்சாட்டின.

இந்த நிலையில், ஜெட் ஏர்வேஸ் தொடர்பான வழக்கில் விசாரணை முடிந்த நிலையில் தலைமைநீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனேஜ் மிஸ்ரா அமர்வு நேற்று பிறப்பித்த உத்தரவு:

நீண்ட காலம் நிலுவையில் உள்ள எந்தவொரு வழக்கிலும் முழுமையான நீதிக்கான உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்றத்துக்கு 142 சட்டப்பிரிவு சிறப்பு அதிகாரத்தை வழங்குகிறது. இந்த வழக்கில், விசித்திரமான மற்றும் மோசமான சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை கலைப்பதை தவிர வேறு வழியில்லை. எனவே, சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை கலைக்க உத்தரவிடப்படுகிறது. இது, கடன் வழங்கியவர், தொழிலாளர்கள், பிற பங்குதாரர்களின் நலன்களை பாதுகாக்கும். ஜெட் ஏர்வேஸ் வாங்கிய கடன்களை அடைக்க தேவையான நடவடிக்கைகளை என்சிஎல்ஏடி உடனடியாக தொடங்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் ரூ.538கோடி கடன் மோசடி செய்ததாககனரா வங்கி புகார் அளித்ததையடுத்து அதன் நிறுவனர் நரேஷ் கோயல், அவரது மனைவி, நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகிகள் மீதுசிபிஐ வழக்கு பதிவு செய்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

22 mins ago

வணிகம்

4 hours ago

வணிகம்

17 hours ago

வணிகம்

22 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

மேலும்