நியூயார்க்: பணவீக்கத்தை கையாள்வதில் இந்தியா மிக திறமையாக செயல்பட்டுள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள கொலம்பியா பல்கலை.யில் ‘‘சவாலான மற்றும் நிச்சயமற்ற உலகளாவிய சூழலுக்குமத்தியில் இந்திய பொருளாதாரத்தின் மீள்தன்மை மற்றும் வாய்ப்புகள்" என்ற தலைப்பில் நிர்மலா சீதாராமன் நேற்று மாணவர்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
பல நாடுகள் பணவீக்க அழுத்தங்களுடன் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், இந்தியா அதனை எளிதாக நிர்வகிக்கக்கூடிய அளவில் குறிப்பிட்ட வரம்புக்குள் வைத்துள்ளது. இது, மிகப்பெரும் சாதனையாகும்.
ஆகஸ்ட் மாதத்தில் 3.68 சதவீதமாக இருந்த நாட்டின் சில்லறைப் பணவீக்கம் செப்டம்பரில் 5.49 சதவீதமாக உயர்ந்தது. இருப்பினும், இது, ரிசர்வ் வங்கியின் அதிகபட்ச வரம்பான 6 சதவீதத்துக்குள்தான் இருந்தது. உணவுப் பொருட்களின் விலை உயர்வு இப்பணவீக்கத்துக்கு முக்கிய காரணம். 2024-25-ல் பணவீக்க சராசரி 4.5%ஆக இருக்கும்என்று கணிக்கப்பட்டுள்ளது.
» காற்றழுத்த தாழ்வு பகுதி வலுக்கிறது: ஒடிசா – மேற்கு வங்கம் இடையே ‘டானா’ புயலாக நாளை கரையை கடக்கும்
இந்தியாவின் சமீபத்திய பொருளாதார செயல்திறன் என்பது வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு இடையே சமநிலையில் உள்ளது. கரோனா பேரிடருக்குப் பிறகு பல முன்னேறிய நாடுகளின் பொது கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதிகரிப்பை கண்டுள்ளது. ஆனால், இந்தியாவில் நடப்பாண்டு ஜூன் நிலவரப்படி வெளிநாட்டுக் கடன் உள்நாட்டு உற்பத்தியில் 18.8 சதவீதம் என்ற வசதியான அளவில்தான் உள்ளது. அடுத்த நிதியாண்டில் இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை மிகக் குறைந்த புள்ளியை எட்டும். உலகளாவிய சூழல் நெருக்கடியில் உள்ள போதிலும் இந்தியாவின் பேரியல் பொருளாதார அடிப்படை வலுவான நிலையில் உள்ளது.
இந்திய வளர்ச்சியின் முக்கியகவனம் ஏழைகளை முன்னேற்றுவதுதான். 2021 மற்றும் 2023-க்கு இடையில் அடித்தட்டு பிரிவில் உள்ள 20 சதவீத குடும்பங்களின் வருமானம் 75% அதிகரித்துள்ளது. அதேசமயம், நடுத்தர குடும்பங்கள்30% ஆதாயத்தை பெற்றுள்ளன.இந்த காலகட்டத்தில் வருமானசமத்துவமின்மை வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. வளர்ச்சியை நோக்கிய இந்தியாவின் பயணத்தை இது தெளிவாக காட்டுகி றது. இவ்வாறு அவர் பேசினார்.
முக்கிய செய்திகள்
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
8 days ago