அனுமதி பெறாமல் நிதி திரட்டும் நிறுவனங்களுக்கு எதிராக சட்டம்: ஆர்பிஐ

முறையான அனுமதி பெறாமல் டெபாசிட் திரட்டும் நிறுவனங்களுக்கு எதிராக சட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்படும் என்று ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் ஆர்.காந்தி தெரிவித்தார். இதற்காக ரிசர்வ் வங்கி மத்திய அரசிடம் பேசி வருவதாகவும் கூறினார்.

பல நிறுவனங்கள் நிதி நிறுவனங்களாக பதிவு செய்யப்பட் டிருக்கின்றன. ஆனால் இந்த நிறுவனங்கள் ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் வரவில்லை.

நிறுவனமாக பதிவு செய்து டெபாசிட்களை திரட்டு வருகிறார்கள். இவர்களை கட்டுப்படுத்த இப்போது இருக்கும் சட்டம் போதாது என்றும் அவர் கூறினார். இதற்கு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று புதுடெல்லியில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் அவர் தெரிவித்தார். மேலும், இந்த நிறுவனங்கள் பற்றிய தகவல்கள் திரட்டுவதிலும், சட்டத்தை அமலாக் குவதிலும் சிக்கல் இருக்கிறது என்றார்.

நிதி சார்ந்த மோசடிகளை எதிர்கொள்ள சர்வதேச ஒத்துழைப்பு அவசியம். அத்துடன் வங்கியல்லாத அமைப்புகளின் செயல்பாடுகளை கடுமையான சட்ட விதிமுறைகளின் மூலம்தான் கட்டுப்படுத்த முடியும்.

ஜி20 நாடுகளின் கூட்ட மைப்பு இத்தகைய விதி முறைகளக் கொண்டு வர ஒப்பக்கொண்டுள்ளதால், அனேகமாக இது அடுத்த ஆண்டு நிறைவேற்றப்படலாம் என்றார் காந்தி. இந்தியாவைப் பொறுத்த மட்டில் வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் (என்பிஎப்சி) செயல்படுகின்றன.

ஆனால் இவை 50 ஆண்டுகளாக கண்காணிப்பின் கீழ் செயல்படுகின்றன என்று அவர் சுட்டிக் காட்டினார். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் இவற்றின் பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

10 hours ago

வணிகம்

17 hours ago

வணிகம்

17 hours ago

வணிகம்

17 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

மேலும்