பிரதமரின் உள்ளக பயிற்சித் திட்டத்தில் பெரும் நிறுவனங்கள் ஆர்வம்: இளைஞர்களின் திறன், வேலைவாய்ப்புக்கு வரப்பிரசாதம்

By Guest Author

பிரதமரின் உள்ளகப் பயிற்சி திட்டம், வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் உந்து சக்தியாக அமைந்துள்ளது. இத்திட்டம் தொடங்கியதில் இருந்து இருந்து நாட்டில் உள்ள பெரு நிறுவனங்கள் இதனைச் செயல்படுத்துவதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றன.

இது இந்திய இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கும் இத் திட்டத்தின் குறிக்கோளை வெற்றி பெற செய்வதாக உள்ளது. அத்துடன் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை அதிகரிக்க செய்து அவர்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்துவதே இத்திட்டத்தின் முதன்மையான குறிக்கோளாக உள்ளது.

இந்தியாவின் 3-ம் நிலை நகரத்தில் உள்ள ஒரு மாநிலப் பல்கலைக்கழக கல்லூரியில், வணிகவியல் பட்டம் பெற்ற ரீனாவின் கதையை கற்பனை செய்து பாருங்கள். அந்தப் பெண் படிப்பில் சிறந்து விளங்கினாலும், அவர் படித்த கல்லூரியில் வேலை வாய்ப்புத் தேடி தரும் பிரிவு ஏதும் இல்லாததால், வேலைக்கும் செல்லமுடியாமல், உயர்கல்வியும் படிக்க முடியாமல், அரசு வேலைக்குத் தயாராவதற்காக அருகில் உள்ள பள்ளியில், ஆசிரியர் பணியாற்றுவதா அல்லது திருமணம் செய்து கொள்வதா என்ற நிலைக்கு தள்ளப்பட்டார். இந்திய இளைஞர்களில் (15-29 வயதுடையவர்கள்) மூன்றில் ஒரு பகுதியினரும், இளம் பெண்களில் பாதிக்கும் மேற்பட்டோரும்.

படிப்பு, வேலைவாய்ப்பு அல்லது பயிற்சி கிடைக்காமல் உள்ளனர். மேலும், இளைஞர்களில் பெரும் பகுதியினர், தனியார் நிறுவனங்களால், வேலையில் அமர்த்த முடியாத அளவுக்கு தொலைதூரத்தில் வசிப்பவர்களாக உள்ளனர். இவர்களைப் போன்ற வர்களுக்காகத்தான் பிரதமரின் உள்ளகப் பயிற்சி திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது. இளைஞர் களுக்கு அதிகாரம் அளிப்பதென்ற அரசின் உறுதிப்பாட்டின்படி சந்தை நிலவரத்திற்கு ஏற்பவும், இளைஞர்களாலேயே தீர்வு ஏற்படுத்தும் நோக்கிலும் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் உள்ளகப் பயிற்சி திட்டம், குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த இளைஞர்களுக்கு நாட்டின் 500 முன்னணி தொழில் நிறுவனங்களில் 12 மாத காலத்துக்கு உள்ளகப் பயிற்சி வழங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. குறைவான வருவாய் கொண்ட குடும்பங்கள் மற்றும் மெட்ரிக்குலேஷன் முதல் பட்டப்படிப்பு வரை படித்த (ஐஐடி பட்ட தாரிகள், சிஏ படித்தவர்கள் தவிர) 21 -24 வயது வரையிலான இளைஞர்கள் இந்தப் பயிற்சி பெற தகுதி பெற்றவர்கள். இவர்களுக்கு மாதம் 5,000 ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படும். இதில் 4,500 ரூபாயை அரசும், 500 ரூபாயை சம்பந்தப்பட்ட தொழிற்சாலையும் வழங்கும்.

இத்திட்டத்தின் முன்னோடியாக 2024-ம் ஆண்டில் 1.25 லட்சம் இளைஞர்கள் பயனடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி 5 ஆண்டுகளில் மொத்தம் ஒரு கோடி இளைஞர்களுக்கு உள்ளகப் பயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்கள் தங்களது சமூகப் பொறுப்புணர்வு நிதியை இத்திட்டத்துக்காக செலவிட அனுமதிக்கப்பட்டுள்ளது.

இளம் ஆர்வலர்களுக்கு இந்த உள்ளகப் பயிற்சி வாய்ப்புகளை வழங்குவதோடு மட்டுமின்றி, மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய அனுபவத்தையும் வழங்குவதாக உள்ளது. பெரு நிறுவனங்களின் பணிச்சூழல் குறித்த உலக யதார்த்தத்தை உணர்த்துவதாகவும் இத்திட்டம் அமைந்துள்ளது.

வேலை வழங்குவோரைப் பொறுத்தவரை உள்ளகப் பயிற்சி என்பது சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நீண்ட கால வேலைவாய்ப்பு வழங்க அவர் தகுதியானவரா என்பதை பரிசோதிப்பதற்கான குறைந்த செலவிலான பரீட்சையாக அமைந்தாலும், அதன் சமூக பொறுப்புணர்வு கடமையை நிறைவேற்றி திறன் இடைவெளியைப் பூர்த்தி செய்வதற்கான நிலையான சாதனமாகவும் அமைந்துள்ளது என்றால் மிகையல்ல.

- வி.அனந்த நாகேஸ்வரன், தலைமைப் பொருளாதார ஆலோசகர் மற்றும் தீக்சா சுப்யால் பிஸ்ட், இந்திய பொருளாதார பணி அதிகாரி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

1 hour ago

வணிகம்

6 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

மேலும்