புதுடெல்லி: ஜிஎஸ்டி வரியில் மாற்றம் கொண்டுவருவது குறித்து அமைச்சர்கள் குழு கடந்த புதன்கிழமை கலந்தாலோசனை நடத்தியது. மக்களின் வரிச் சுமையைக் குறைக்க 100 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியில் மாற்றம் கொண்டுவருவது குறித்து அந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக மேற்கு வங்க மாநில நிதி அமைச்சர் சந்திரிமா பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “சாமானிய மக்களுக்கு பலன் கிடைக்கும் வகையில் ஜிஎஸ்டிவரி வகிதத்தில் மாற்றம் கொண்டுவருவது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. உணவு பொருட்களுக்கு விதிக்கப்படும் 12 சதவீத ஜிஎஸ்டியை 5 சதவீதமாக குறைப்பது, சைக்கிள், மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவற்றுக்கான ஜிஎஸ்டியை குறைப்பது குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. வரி குறைக்கப்படும்பட்சத்தில், ஜிஎஸ்டி வரி வருவாய் பாதிக்கப்படும். அதை ஈடுகட்ட சிலபொருட்கள் மீதான வரியை உயர்த்துவது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசித்தோம். குறிப்பாக, அழகு சாதனப் பொருட்கள், குளிர்பானங்களுக்கான ஜிஎஸ்டி வரியை உயர்த்த ஆலோசிக்கப்பட்டது” என்று தெரிவித்தார்.
காப்பீடு திட்டங்களுக்கு.. தற்போது மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீடு திட்டங்களுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது. இதைக் குறைக்க வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி, சில மாதங்களுக்கு முன்பு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதினார். இந்நிலையில், மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீடு தொடர்பான ஜிஎஸ்டியை குறைப்பது குறித்த முடிவு அடுத்த கூட்டத்தில் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அக்டோபர் 19-ல் கூட்டம்: அடுத்த கூட்டம் அக்டோபர் 19-ம் தேதி நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் இறுதிப் பரிந்துரைகள் உருவாக்கப்படும். அவை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும். அடுத்தகூட்டத்தில், தமிழ்நாடு, கேரளா,கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மேற்கு வங்கம், மேகாலயா, பஞ்சாப், குஜராத், பிஹார்,கோவா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 13 அமைச்சர்கள் பங்கு பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
வணிகம்
1 hour ago
வணிகம்
6 mins ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago